Tamilnadu
தி.மு.க கூட்டணி : CPIM, CPI கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.கவை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.
இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்றே அழைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அண்மையில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு MP தலைமையில் பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டது. இக்குழு கூட்டணி கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் நாமக்கல் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விசிகக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தித்து எந்த தொகுதியில் போட்டியிருவது என்பதை உறுதி செய்தனர். அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!