Tamilnadu
"தேர்தல் ஆணையரின் ராஜினாமாவின் பின்புறம் மோடியின் யுக்தி இருக்கிறது - தயாநிதி மாறன் MP குற்றச்சாட்டு !
சென்னை கொளத்தூர் திரு.வி.க நகர் மைதானத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தமிழ்நாடு முதல்வரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 25 அணிகள் பங்குபெறும் மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியினை கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் எம் பி தயாநிதிமாறன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன் எம். பி, "தமிழ்நாட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ள தொகுதி கொளத்தூர் தொகுதிதான். அதன் அத்தனை பெருமையும் நமது முதல்வரையே சேரும். தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது. இருந்தாலும் நமது முதல்வர் செய்கின்ற பணி எப்பொழுதும் முதன்மையாக இருக்கும். உதாரணமாக இன்று 40 தொகுதிகளுக்கான ஒதுக்கீடுகள் நிறைவு செய்யப்பட்டு அதற்கான நேர்காணல்கள் இன்று நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையர் தனது பதவி ராஜினாமா செய்து விட்டார். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒன்றிய அரசுகள் தேர்தலில் தலையிடக்கூடாது என்பதற்காக 3 தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்தார்கள். ஒரு தலைமை ஆணையர் மற்றும் 2 துணை தேர்தல் ஆணையர்கள் என 3 பேர் நியமனம் செய்யப்பட்டு காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்டு வந்தனர்.
வருகின்ற வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பல கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது. இதன் பின்புறம் மோடியின் யுத்தியை உள்ளதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக எலக்ட்ரானிக் ஓடிங் மிஷினில் மீதான மிகப்பெரிய சந்தேகம் எல்லாருக்கும் எழும்பியுள்ளது. இதன் காரணமாக இவர்களது வெற்றி உண்மையான வெற்றியா? இல்ல பொய்யான வெற்றி என்பது கேள்விக்குறியாக உள்ளது. தலைமை தேர்தல் ஆணையமும் சரியில்லை. இவற்றை சரி செய்ய நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றியை ஏமாற்றக்கூடிய செயல்களில் பாஜக தற்போது இறங்கி விட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!