Tamilnadu
தி.மு.க கூட்டணி : மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.கவை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.
இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்றே அழைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அண்மையில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு MP தலைமையில் பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டது. இக்குழு கூட்டணி கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்