Tamilnadu
குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு போதை மருந்து சப்ளை : குஜராத் சென்று தமிழ்நாடு போலீசார் அதிரடி !
நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களிடையே, போதை மாத்திரை பழக்கம் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் என்னும் பகுதியில், கட்டிட கூலித் தொழிலாளர்கள் மயான பகுதியில் தங்கள் பயன்படுத்திய ஊசி மருந்துகளை வீசி செல்வது கண்டறியப்பட்டது. அப்படி செய்பவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இதில் சம்மந்தப்பட்ட வட மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதனை அடுத்து இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க எலச்சிபாளையம் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு விமானம் மூலம் விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த சித்திக்சவுத்ரி என்கிற தினேஷ்குமாரை போலீசார் கைது செய்து, வெப்படை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவனிடம் விசாரணை கொண்ட பொழுது, தமிழ்நாட்டில் அரிதாக கிடைக்கக்கூடிய வலி நிவாரண மாத்திரைகள், குஜராத் மாநிலத்தில் சகஜமாக கிடைப்பதால், அங்கிருந்து பெற்று அவற்றை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவிலேயே அதிக அளவில் போதை மருந்து குஜராத் வழியாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன. அதே போல போதைமருந்து பறிமுதல் செய்யப்பட்ட முதல் 10 மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!