Tamilnadu
எழுத்தாளர்களை கொண்டாடும் அரசு : 10 எழுத்தாளர்களுக்கு குடியிருப்பு ஆணைகள் வழங்கிய முதலமைச்சர்!
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 10 எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு அரசாணைகளையும் 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
கனவு இல்லத் திட்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாதமி விருது, முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலமாக வீடு வழங்கப்படும்‘’ என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.
கனவு இல்லத்திட்டத்தின் முதற்கட்டமாக 3.6.2022 அன்று பேரா.முனைவர் கு. மோகனராசு, ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், .பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், இமையம் என்கிற வெ. அண்ணாமலை, இ. சுந்தரமூர்த்தி மற்றும் கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன் ஆகிய ஆறு அறிஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கனவு இல்லத்திற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.
இவர்களுள் கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன் அவர்களுக்கு 03.05.2023 அன்றும், ந.செகதீசன் (ஈரோடு தமிழன்பன்), பூமணி (பூ.மாணிக்கவாசகம்), இமையம் என்கிற வெ. அண்ணாமலை, இ. சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு 24.05.2023 அன்றும் பேரா.முனைவர் கு. மோகனராசு அவர்களுக்கு 30.05.2023 அன்று கனவு இல்லத்திற்கான திறவுகோலும் வழங்கப்பட்டது.
கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2021-2022ஆம் ஆண்டுக்கு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சோ. தர்மராஜ், முனைவர் மா. இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன் ஆகிய மூவருக்கும்,
2022-23ஆம் ஆண்டுக்கு பொன். கோதண்டராமன், சு. வெங்கடேசன், திரு.ப. மருதநாயகம், மரு. முனைவர் இரா. கலைக்கோவன், எஸ். இராமகிருஷ்ணன், ஆர்.என். ஜோ. டி குருஸ், சி. கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து அறிஞர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு அரசாணைகளையும், 2023-24ஆம் ஆண்டுக்கு திரு.ம. இராசேந்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகிய அறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிருவாக அனுமதி ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
கலைஞர் எழுதுகோல் விருது
“சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்” என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகப் பல ஆண்டுகள் பணியாற்றிப் பெற்றுள்ள நீண்ட அனுபவங்களையும், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந் தொண்டுகளையும் பாராட்டி 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுடன் 5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!