Tamilnadu
“புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்... ரூ.655 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகள்”: அசத்தும் தமிழ்நாடு அரசு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.3.2024) மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் நடைபெற்ற அரசு விழாவில், 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 308 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 88 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 40 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 12,653 பயனாளிகளுக்கு 143 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மயிலாடுதுறை, மன்னம்பந்தலில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் 2,82,883 சதுர அடி பரப்பளவில் 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.1.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, விரைந்து கட்டி முடிக்கப்பட்டு இன்றையதினம் முதலமைச்சர் அவர்களால் இப்புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில், காப்பறை, மாவட்ட கருவூல அலுவலகம், மக்கள் குறைத்தீர்ப்பு மனுக்கள் பெறும் அரங்கம், மைய ஆவணங்கள் காப்பகம், வருவாய் பதிவு அறை, சிறப்பு துணை ஆட்சியர் (சமூக சேவை திட்டம்), ஊடக அறை, மருந்தகம் / மருத்துவ காப்பீடு அலுவலகம், அஞ்சல் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு அலுவலகம், மறுவாழ்வு மையம்; முதல் தளத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அறை, மாவட்ட வருவாய் அலுவலகம், கூட்டரங்கம், சிறு கூட்டரங்கம், காணொளி காட்சி அறை, மாவட்ட ஆட்சியர் பொதுப்பிரிவு, வருவாய் பிரிவு, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், தலைமை சர்வேயர், தேசிய தகவல் மையம்; இரண்டாம் தளத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் துறை, இந்திய நிர்வாக சேவை பயிற்சி மையம், வருவாய் நீதிமன்ற தனித்துணை ஆட்சியர், சுரங்கங்கள் அலுவலக உதவி இயக்குநர், சிறு தொழில் அலுவலகம், சமூக மேம்பாட்டுக்குழு முதுகலை ஆராய்ச்சி மையம், சட்ட அலுவலகம், அனைத்து வருவாய் பிரிவுகள் அலுவலகம்;
மூன்றாம் தளத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அலுவலகம், உதவி இயக்குநர், பஞ்சாயத்து அலுவலகம், கணக்காய்வு அலுவலகம், செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி அலுவலகம், கலந்தாய்வு மாநாட்டுக் கூடம்; நான்காம் தளத்தில், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலகம், தலைமை நிர்வாக அதிகாரி, சிறு தொழில் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தலைமை கல்வி அலுவலகம், கூட்டரங்கம், வேளாண் வணிக விவசாய வியாபார அலுவலகம், பட்டுப்புழு வேளாண்மை அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம்; ஐந்தாம் தளத்தில், மருத்துவ அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மருத்துவ வாரியம், கூட்டுறவு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், புள்ளியியல் உதவி இயக்குநர் அலுவலகம், குழந்தைகள் மாட்சிமை அதிகாரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்;
ஆறாம் தளத்தில், மாவட்ட தொழிலாளர் அலுவலகம், தொழிலாளர் நீதிமன்றம், வீட்டு வசதி வாரிய அலுவலகம், பால் பண்ணை அலுவலகம், மாவட்ட தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்பு அலுவலகம், பட்டுப்புழு வேளாண்மை அலுவலகம், செயற்பொறியாளர் வீட்டு வசதி வாரியம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், நிலம் மற்றும் நில அளவை பதிவு அலுவலகம், மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், கூட்டரங்கம், உள்ளூர் திட்டமிடல் ஆணைய அலுவலகம், செயற்பொறியாளர் அலுவலகம்; ஏழாம் தளத்தில், உணவு பாதுகாப்பு அலுவலகம், மின்சார அறை, ஆண்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், ஆவின், சுற்றுலா அலுவலகம், தமிழ்நாடு நீர் வழங்கல் வடிகால் வாரியம், கூட்டரங்கம், கைத்தறி அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 4 மின் தூக்கிகள், வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 4 கோடியே 72 ஆயிரம் ரூபாய் செலவில் சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வட்ட குறுவட்ட அளவர் குடியிருப்புகள்; கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் செம்பனார் கோவிலில் 48 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகம்; கலை பண்பாட்டுத் துறை சார்பில் தாடாளன் கோவிலில்
1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அரசினர் இசைப்பள்ளி;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 3 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறை நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், திருவெண்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புற நோயாளிகள் பிரிவு மற்றும் சித்த மருந்தகக் கட்டடங்கள், பெருந்தோட்டத்தில் துணை சுகாதார நிலையம், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ஒலி புகா அறை;
நெடுஞ்சாலைத் துறை சார்பில் 12 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் பெரிய மற்றும் சின்ன வகுப்பு சாலையில் பாலம் கட்டும் பணி, மாப்படுகை – கடலங்குடி சாலை, மேமாத்தூர்-உத்திரங்குடி சாலை, கண்டியூர் – புதுத்தெரு ஆகிய இடங்களில் பாலங்கள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 71 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் மயிலாடுதுறை நகராட்சியில் மாமரத்து மேடை குளம், அங்காளம்மன் குளம், ஆழிக்குளம், அறுபத்திமூவர் பேட்டை குளம், செத்தங்குடிராஜா குளம், வரதாச்சாரியார் பூங்கா, மாருதி நகர் விரிவாக்கம் பூங்கா, குமரன் பூங்கா, தாமரைக்குளம், அக்கனாங்குளம், சுப்ரமணியபுரம் பூங்கா, சீர்காழி நகராட்சியில் கோவில் பத்து காமராஜ் குளம், காந்தி பூங்கா கரிக்குளம், குத்தாலம் பேரூராட்சியில் கே.ஆர்.எஸ். நகர் பூங்கா ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்கள், திம்மனாயக்கம் படித்துரை மயானத்தை LPG கிரிமிடோரியமாக கட்டி முடிக்கப்பட்ட பணி, மயிலாடுதுறை பெரியார் மருத்துவமனை வளாகத்தில் உட்புற நோயாளி உடன் தங்குவோர் தங்குமிடம், மேலச்செட்டித் தெருவில் மேம்படுத்தப்பட்ட பொதுக் கழிப்பிடம், பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பணிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 4 கோடியே 54 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் செம்பனார்கோயில், காட்டுச்சேரி ஊராட்சியில் 100 சமத்துவபுர வீடுகள் புனரமைப்பு மற்றும்
9 உட்கட்டமைப்பு பணிகள்;
என மொத்தம் 150 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 34 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
காவல்துறை சார்பில் 15 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட காவல்துறை அலுவலகக் கட்டடம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் குத்தாலம் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சீர்காழியில் 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை, நீர்வளத்துறை சார்பில் 24 கோடியே 10 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அளக்குடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை பலப்படுத்தும் வெள்ள தடுப்புப் பணி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 3 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரங்கம்பாடி மற்றும் குத்தாலத்தில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்
7 கோடியே 46 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வைத்தீஸ்வரன் கோயில் முதல்நிலை பேரூராட்சியில் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடங்கள், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் புதிய வணிக வளாகம், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள், மணல்மேடு முதல்நிலை பேரூராட்சி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைகள், சுற்றுசுவர், வகுப்பறைகள்;
பள்ளிக்கல்வித் துறை சார்பில் 24 கோடியே 4 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எருமல் தொக்கலகுடி, காவேரிபூம்பட்டினம், கொடக்கரமூலை, வைத்தீஸ்வரன்கோவில், தில்லையாடி வள்ளியம்மை, கம்பர் தேரழந்தூர், ஸ்ரீகண்டபுரம், திருமுல்லைவாசல், ஆச்சாள்புரம், புதுப்பட்டிணம், துளசேந்திரபுரம், அக்கூர், சின்னங்குடி, வடகரை, அகராதனூர், திட்டபடுகை, கீழாத்துகுடி, குத்தாலம் ஆகிய அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள்;
என மொத்தம் 80 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விவரம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1200 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ், திருமண உதவித் தொகை மற்றும் இறப்பு உதவி தொகை, தமிழ்நாடு மாநில ஊரக (நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்) மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி, வங்கிக்கடன் பெருங்கடனுதவி, சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் சுழல்நிதி, ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை தொகுப்பு, மீன் வளர்ப்பு, வட்டார வணிக வள மையம், இயற்கை வேளாண் பண்ணை தொகுப்பு, விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவன பசுமை நிதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் முன்தொழில் நிதி, இணை மானிய நிதி, செம்மயில் விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவன பசுமை நிதி;
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பராமரிப்பு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, இலவச தையல் இயந்திரங்கள், இலவச காதொலி கருவிகள், கைபேசிகள், மடக்கு குச்சிகள், வங்கி கடனுதவி, திருமண உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி, வாசிப்பாளர் உதவித்தொகை;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு பெட்டகங்கள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குதல், கூட்டுறவுத் துறை சார்பில் பயிர்கடன், பல்சேவை மையம், கால்நடை கடன், சிறுவணிக கடன் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இலவச சலவை பெட்டிகள், தையல் இயந்திரங்கள், பால் பண்ணை அமைக்க கடனுதவி, வாகன கடன்கள் வழங்குதல்;
பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரங்கள், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் உதவித்தொகை, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மானியத்துடன் கடனுதவி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு ஊக்கத்தொகை, சுழற்கலப்பை, தார்பாய், மின்கல விசைத்தெளிப்பான், விவசாய பண்ணை கருவிகள் வழங்குதல், கொடிவகை காய்கறி வளர்ப்பதற்கான நிரந்தர பந்தல், காளான் வளர்ப்பு ஊக்கத் தொகை, நுண்ணீர் பாசனம், தமிழிசைமூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குதல்;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க நிதியுதவி, கறவை மாடு வழங்குதல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிபொருத்தும் இயந்திரம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள், கல்வி உதவித் தொகை, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 150 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, நலவாரிய அட்டை வழங்குதல், எரிசக்தித் துறை சார்பில் 150 நபர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள் வழங்குதல்;
என மொத்தம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 8032 பயனாளிகளுக்கு 128 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 5 கோடியே 12 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவில் நன்னிலம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம், திருத்துறைப்பூண்டி குறுவட்ட அளவர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, பாலையூர், மன்னார்குடி, தலையாமங்கலம், வடுவூர், ஆலங்குடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், வலங்கைமான் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம், ஆய்குடி – கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 4 கோடியே
32 இலட்சம் ரூபாய் செலவில் ஊர்குடி, பூவனூர், புதுதேவங்குடி, பேரையூர், கமலாபுரம், மாணிக்கமங்கலம், எரிவேலூர், கோவில்வெண்ணி, எடகீழையூர், முனியூர், கருவாக்குறிச்சி, செல்லூர், அபிவிருத்தீஸ்வரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், திருவாரூர் – தடுப்பூசி உபகரணங்கள் கிடங்கு, வடுவூர் – வட்டார பொது சுகாதார மையம், அரித்துவாராமங்கலம் – ஆரம்ப சுகாதார நிலையம்;
பள்ளிக்கல்வித் துறை சார்பில் 69 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
2 அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள், கலை மற்றும் கைவினை அறை, கணினி அறை;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 1 கோடியே 51 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கருப்புகிளார், பைங்காட்டூர், புளியக்குடி ஆகிய இடங்களில் கிராம ஊராட்சி செயலகங்கள் மற்றும் புழுதிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்;
போக்குவரத்துத் துறை சார்பில் மன்னார்குடியில் 1 கோடியே 97 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் சோதனை ஓட்ட வழித்தடம்; என மொத்தம் 13 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் திருவாரூர் மாவட்டத்தில் 32 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
வருவாய் மற்றும் போடர் மேலாண்மைத் துறை சார்பில் 1040 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள், ஸ்பைனல் ஸ்கூட்டர், தையல் இயந்திரங்கள், ஸ்மார்ட் போன்கள், சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் உதவிகள் மற்றும் தையல் இயந்திரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஆடுவளர்ப்பு மற்றும் ஆடு சார்ந்த தொழில், வேளாண் மற்றும் வேளாண் சார் துணை தொழில்களுக்கு உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நிதி ஆதரவு திட்ட உதவிகள், மகளிர் திட்டத்தின் கீழ் மகளிர் குழுவிற்கு சமுதாய முதலீட்டு நிதியுதவி மற்றும் முதியோருக்கு வாழ்வாதார நிதி; என திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 1961 பயனாளிகளுக்கு 5 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வேதாரண்யத்தில் 2 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், தலைஞாயிறில் 21 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நாகப்பட்டினம், ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தின் மருத்துவமனையில்
126 கோடியே 57 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தல் மற்றும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 128 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புகள், ஆண்கள் மற்றும் பெண்கள் மருத்துவர் விடுதிகள், செவிலியர் குடியிருப்பு, முதல்வர் குடியிருப்பு, நிலைய மற்றும் உதவி நிலைய மருத்துவ அலுவலர் கட்டடங்களின் பயன்பாட்டு சேவைகளை தொடங்கி வைத்தல்;
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாகூரில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதி மற்றும் சமுதாயக்கூடம்; என மொத்தம் 259 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நாகூரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய மருத்துவமனைக் கட்டடம்; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் நகரத்தில் 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிறிஸ்துவர்களுக்கான கல்லறை தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி; வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் நாகப்பட்டினத்தில் 2 கோடியே 58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 7 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகை வழங்குதல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் தேய்ப்புப் பெட்டிகள் வழங்குதல், தோட்டக்கலைத் துறை சார்பில் பந்தல் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, சொட்டுநீர் பாசனத்திற்கான நிதியுதவி வழங்குதல், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு தார்பாலின், மருந்து தெளிப்பான் வழங்குதல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நாட்டு படகிற்கு வெளிப்புற இஞ்சின் வழங்குதல், சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிர்வு தொகை வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியுதவி, மாவட்ட தொழில மையத்தின் சார்பில் தொழில் கடன்கள் வழங்குதல், கூட்டுறவுத் துறை சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி, சமூக பாதுகாப்புத் திட்டத்தில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித் தொகை வழங்குதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1500 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்குதல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மகளிர் திட்டத்தின் கீழ் கடனுதவிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் கடனுதவிகள்;
என மொத்தம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2660 பயனாளிகளுக்கு 9 கோடியே 34 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
கிராம நத்தம் பகுதிகளுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் சேவைகள் வழங்குவதற்கான நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தை தொடங்கி வைத்தல்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிராம நத்தம் பகுதிகளுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் சேவைகள் வழங்குவதற்கான நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, முதற்கட்டமாக 146 வட்டங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் கிராமப்புற விவசாய நிலங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் அனைத்தும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கைப்பிரதி ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டு பட்டா மாறுதல் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கிராம நத்தம் பகுதிகள் அனைத்தும் 1987-ஆம் ஆண்டு அரசாணையின்படி நத்தம் நில அளவை மற்றும் நிலவரித் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, நத்தம் நிலஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. நத்தம் நில ஆவணங்கள் 38 மாவட்டங்களில் 301 வட்டங்களில் பயன்பாட்டில் இருந்துவருகின்றன.
2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கிராம நத்தம் மனை பகுதிகளுக்குண்டான கைப்பிரதி நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, கிராம நத்தம் மனை பகுதிகளுக்கான கைப்பிரதி நிலஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, தேசிய தகவலியல் மையம் மூலம் புதியதாக தமிழ்நிலம் (நத்தம்) மென்பொருள் உருவாக்கப்பட்டு, 146 வட்டங்களில் முதற்கட்டமாக இந்த மென்பொருள் வாயிலாக நத்தம் பட்டா மாறுதல் சேவைகள் பட்டாதாரர்களுக்கு இணையவழியில் வழங்கப்படும்.
"இணையவழி நத்தம் பட்டா மாறுதல் திட்டத்தின்" மூலம் தற்போது 146 வட்டங்களில் 30,20,247 தனிப்பட்டாக்களில் 30,20,247 பட்டாதாரர்களுக்கும் 5,15,941 கூட்டுப்பட்டாக்களில் 45,12,855 பட்டாதாரர்களுக்கும், என மொத்தம் 35,36,188 பட்டாக்களில் 75,33,102 பட்டாதாரர்களுக்கு இணையவழி சேவை மூலம் கிராம நத்தம் பட்டா வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மீதமுள்ள 155 வட்டங்களில் "இணையவழி நத்தம் பட்டா மாறுதல் திட்டம்" 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!