Tamilnadu
“எதிரியின் கால்பிடிக்கும் கோழைகளுக்கும் அச்சம்தரும் ஜனநாயகப் போர்க்குரல்..” - அமைச்சர் உதயநிதி வாழ்த்து !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு கழக தொண்டர்கள், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் கழக தொண்டர்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அதோடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து பலரும் தங்கள் வாழ்த்துகளையும் பரிசுகளையும் வழங்குகின்றனர். தொடர்ந்து முதலமைச்சருக்கு பிரதமர், துணை குடியரசு தலைவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஆதிக்கத்தை எதிர்க்கும் திராவிட இயக்கத்தின் நிகழ்கால நம்பிக்கை. பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் சிந்தனை, செயல், ஆற்றல் ஆகியவற்றின் கலவையாய் தமிழ்நாட்டின் உரிமைக் காக்கும் மகத்தான தலைவர்.
எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், எதிரியின் கால்பிடிக்கும் கோழைகளுக்கும் அச்சம்தரும் ஜனநாயகப் போர்க்குரல். வாக்களித்தோர்க்கும், வாக்களிக்கத் தவறியோர்க்கும் அரசின் திட்டங்கள் மூலம் சமமாய் ஒளிவீசும் திராவிடச் சூரியன்.
நம் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தோம். இனமானம் காப்போம், உரிமைகளை வெல்வோம், துவள மாட்டோம் - வீழ மாட்டோம் என நம் முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!