Tamilnadu
வணிகர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு அமல்படுத்தும் புதிய சட்டம் : 5 ஆயிரம் கடைகளை அடைத்து போராட்டம் !
பாஜக ஆட்சியமைத்தில் இருந்தே மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக விவசாயிகள், சிறுபான்மையினர், ஓபிசி மக்கள் என பலருக்கும் எதிராக பல்வேறு சட்டங்களை வரையறுத்து வருகிறது பாஜக அரசு. 3 வேளாண் சட்டத்தை அமல்படுத்த துடித்த பாஜக, விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் அதனை திரும்ப பெற்றது.
இந்த சூழலில் தற்போது வணிகர்களுக்கு எதிராக புதிய சட்டத்தை அமல்படுத்தவுள்ளது. வணிக கடன்களை விரைந்து வசூலிக்க ஒன்றிய அரசு சட்ட திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விசைத்தறி உரிமையாளர்களும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, ஈரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் வீதி, டி.வி.எஸ். வீதி, பிருந்தா வீதி, கோட்டை, என்.எம்.எஸ்.காம்பவுண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஜவுளி மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈரோட்டில் மட்டும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஜவுளி மற்றும் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தி நிலையங்கள், கடைகள் மற்றும் குடோன்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஈரோடு கிளாத் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சிதம்பர சரவணன் கூறுகையில், “சிறு, குறு தொழில் செய்வோரது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு, ஒன்றிய அரசு வருமான வரிச்சட்டத்தில் MSME (43B) H எனும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் வரும் மார்ச் 31ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த புதிய சட்டத்திபடி, தங்கள் இருப்பு நிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) கணக்கில் இருக்கும் வணிகக் கடன் நிலுவைகள் 45 நாள்களுக்கு மேலாகி இருந்தால், அவை வருமானமாக கருதப்பட்டு அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசு புதிய சட்ட மாறுதலை செய்துள்ளது. ஜவுளி சார்ந்த தொழிலில் துணிகளை கொள்முதல் செய்து பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என பல நிலைகளைக் கடந்தே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
அதற்கேற்ப, 45 நாள்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாள்களில்தான் கடன் தொகையை நேர் செய்வார்கள். இதன் நடைமுறை இப்படி இருக்கும்போது, தற்போதைய புதிய சட்ட திருத்தத்தால் அத்தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், ஜவுளி மற்றும் ஜவுளித் தொழில் சார்ந்த தொழில்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழில் நடத்தவே முடியாத நிலை ஏற்படும்.
எனவே, ஜவுளித் தொழிலை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் இந்த சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனத்தினர் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். இதன் மூலமாக ஈரோட்டில் மட்டும் இன்று ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேபோல, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினரும் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்ட் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசின் புதிய சட்டத் திருத்ததை கைவிடக் கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, எங்களது கூட்டமைப்பின் சார்பில், தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், சேலம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகளும், ஈரோடு மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவிசைத்தறிகளும் இயக்கப்படவில்லை.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?