Tamilnadu
“எம்.ஜி.ஆருக்கு பதில் அரவிந்த் சாமியை வைத்த கட்சிதான் அதிமுக” - காங்கிரஸ் ஆனந்த் சீனிவாசன் விமர்சனம் !
தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் துறையில் மாநிலத் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் ஆனந்த் சீனிவாசன் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியாதாவது, “இன்று நான் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவராக பதவியேற்றுள்ளேன். காங்கிரஸ் தொடர்பான கேள்விகளுக்கு நான் சொல்லும் ஆதாரபூர்வமான தகவல்கள் உண்மையாகதான் இருக்கும்.
திமுகவிற்கு எங்களுக்கும் (காங்கிரஸ்) பிரச்னை இருப்பதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல் முற்றிலும் தவறு. இன்னும் மூன்று நாட்களில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும். எங்கள் கூட்டணி நிச்சயம் 40/40 தொகுதிகளில் வெற்றி பெறும்.
தமிழ்நாடு அல்லாத மாநிலங்களில் ஊடகங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிரான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியொரு நிலைமை இல்லை. இருப்பினும் சமூக ஊடகம் உள்ளிட்டவற்றில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள், ஆளும் பாஜகவை சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் செய்யும் தவறினையும் சுற்றி காட்டி மக்களுக்கு அதனை கொண்டு செல்லவேண்டும்.
அதிமுக தற்போது என்ன நிலைமைக்கு உள்ளது என்றால், எம்.ஜி.ஆரையே மறந்துவிட்டது. எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு பதிலாக அரவிந்த் சாமியின் புகைப்படத்தை பேனராக அடிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆரை மறந்த கட்சியைப் பற்றி பேச ஒன்றுமில்லை. திமுகவின் வாக்குகளை பாஜகவுக்கு கொடுக்கும் நிலைதான் உள்ளது.” என்றார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!