Tamilnadu
குடிநீர் தட்டுப்பாடுக்கு நிரந்தர தீர்வு.. ரூ.2465 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.2.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 1516 கோடியே 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் 948 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நெம்மேலியில் ரூ.1516.82 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல்
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் 25.2.2007 அன்று தமிழ்நாடு முதலமைச்சரும் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால்31.7.2010 அன்று இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையத்திலிருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார்
10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றார்கள்.
இதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகளை அன்றைய துணை முதலமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 23.02.2010 அன்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையத்தின் மூலம், தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், இராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினை தொடர்ந்து சென்னைக்கு அருகாமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், வளர்ச்சிக்கேற்ப சீரான குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 21.8.2023 அன்று அடிக்கல் நாட்டினார். இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய உள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இந்நிலையில், நெம்மேலியில் 1516 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனிததோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் (OMR) அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பகுதிகளில் உள்ள சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பகுதிக்கான விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்; பெருங்குடி மண்டலம், எல்.பி.சாலை கழிவுநீர் உந்துநிலையத்திலிருந்து பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை உந்துகுழாய்கள் சீரமைக்கும் பணிகள் மற்றும் வார்ப்பிரும்பு உந்து குழாய்கள் அமைக்கும் பணிகள்; குன்றத்தூரில் நாளொன்றுக்கு 0.8 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மாற்றுமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாற்று சாலையோர கழிவுநீரேற்று நிலையம்; ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நாளொன்றுக்கு 8.5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள்;
என மொத்தம் 129.50 கோடி ரூபாய் செலவில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 7 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
திருவள்ளூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், தேனி, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள திருத்தணி நகராட்சி, தென்கரை, சிவகிரி பேரூராட்சிகள் மற்றும் 1219 ஊரக குடியிருப்புகள் ஆகியவை பயன்பெறும் வகையில் 315.98 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 58.30 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையிலும், சுமார் பத்து லட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள 3 தனி குடிநீர் திட்டங்கள் மற்றும் 6 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்;
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி ஆகியவை பயன்பெறும் வகையில் 217.13 கோடி ரூபாய் செலவில், 20.72 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையிலும், சுமார் இரண்டு இலட்சத்து 16 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பாதாள சாக்கடைத் திட்டங்கள்;
என மொத்தம் 533 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
பெரியகுளம் நகராட்சியில் 1 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்; தஞ்சாவூர் மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளில் 50.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வணிக வளாகங்கள்; சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகங்கை நகராட்சியில் 4.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 அறிவுசார் மையங்கள்;
ஈரோடு மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள், அரியலூர், செங்கோட்டை, கம்பம், சங்கரன்கோவில், நாகப்பட்டினம், கொடைக்கானல், புகழூர், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நகராட்சிகளில் 57.28 கோடி ரூபாய் செலவில்
10 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தைகள்;
தாம்பரம் மற்றும் ஓசூர் மாநகராட்சிகள், அரியலூர், கூடலூர், சங்கரன்கோவில் திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய நகராட்சிகளில் 8.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 4.64 கோடி ரூபாய் செலவில் திருநின்றவூர் நகராட்சியில் புதிய அலுவலகக் கட்டடம் மற்றும் புகழூர் நகராட்சியில் கூடுதல் அலுவலகக் கட்டடம்;
கள்ளக்குறிச்சி, சோளிங்கர், புதுக்கோட்டை, கோட்டக்குப்பம், விழுப்புரம் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளில் 12.12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பூங்காக்கள்; மறைமலைநகர் மற்றும் விழுப்புரம் நகராட்சிகளில் 1.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 பொது சுகாதார கழிப்பிடங்கள்;
தஞ்சாவூர் மாநகராட்சியில் 14.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாகனம் நிறுத்துமிடம்; சிதம்பரம், மறைமலைநகர் மற்றும் துவாக்குடி நகராட்சிகளில் 8.71 கோடி ரூபாய் செலவில் 8 மேம்படுத்தப்பட்ட நீர்நிலைகள்; தாம்பரம் மாநகராட்சியில் 2 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள்; ஓசூர் மாநகராட்சியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான கட்டடம், சேலம் மாநகராட்சியின் மெய்யனூர் நுண் உயிர் உரம் தயாரிக்கும் வளாகத்தில் பொருள் மீட்பு வசதி மையம், திருவாரூர் நகராட்சி, அரசு மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள் தங்கும் கூடுதல் கூடம், கொடைக்கானல் நகராட்சியில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தங்குமிடம் மற்றும் படகு குழாம், என 7.58 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட 5 திட்டப் பணிகள்; என மொத்தம், 172 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் முடிவுற்ற 52 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
இராணிப்பேட்டை மாவட்டம் - திமிரி பேரூராட்சி, சிவகங்கை மாவட்டம்- இளையான்குடி பேரூராட்சி, தேனி மாவட்டம் - தேவாரம் பேரூராட்சி ஆகிய பேரூராட்சிகளில் 9.75 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையங்கள்;
கரூர் மாவட்டம் - உப்பிடமங்கலம் பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம்- மோகனூர் பேரூராட்சி, ஈரோடு மாவட்டம் - சித்தோடு பேரூராட்சி ஆகிய பேரூராட்சிகளில் 10.83 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன சந்தைகள்;
தென்காசி, மாவட்டம் - வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில்
60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையம்; தேனி மாவட்டம் - பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி, திருவாரூர் மாவட்டம் - நன்னிலம் பேரூராட்சிகளில் 3.18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையங்கள்; இராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர் பேரூராட்சி, சேலம் மாவட்டம் - ஜலகண்டாபுரம் பேரூராட்சி, திருப்பத்தூர் மாவட்டம்- ஆலங்காயம் பேரூராட்சி ஆகிய பேரூராட்சிகளில் 8.66 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கசடு அகற்றும் சுத்திகரிப்பு நிலையம்;
என மொத்தம் 33 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தேசிய நகர்ப்புர சுகாதாரப் பணியின் கீழ், 4.95 கோடி ரூபாய் செலவில் அண்ணாநகர் மண்டலம், சேத்துப்பட்டு-ஜெகநாதபுரத்திலும், 4.93 கோடி ரூபாய் செலவில் தேனாம்பேட்டை மண்டலம், பெரியார் நகர்-ஷர்புதீன் தெருவிலும் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள்;
ரிப்பன் கட்டட வளாகத்தில் சீர்மிகு ஆளுமைக் கட்டடம் மற்றும் கட்டளை மையம்
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரிப்பன் கட்டட வளாகத்திற்குள் 4,705 ச.மீ. பரப்பளவில் 57.76 கோடி ரூபாய் செலவில், 24x7 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், பேரிடர் மேலாண்மை மையம், தகவல் தொழில்நுட்பத் துறை (IT) மற்றும் புவியியல் தகவல் அமைப்புத் துறை (GIS), சிறப்பு திட்டங்கள் துறைக்கான அலுவலகம், கூட்டரங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி, அதிநவீன உட்கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள சீர்மிகு ஆளுமைக் கட்டடம் மற்றும் கட்டளை மையம்;
பூங்காக்கள்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திருவொற்றியூர் மண்டலம்- சுனாமி குடியிருப்புப் பகுதி, திரு.வி.க.நகர் மண்டலம் - ஏ.கே. சுவாமி முதல் தெரு, பெருங்குடி மண்டலம் - செட்டிநாடு என்கிளேவ், ஜல்லடியன்பேட்டை, கிருஷ்ணா நகர்-3வது குறுக்குத் தெரு மற்றும் முத்து நகர் ஆகிய பகுதிகளில் 1.94 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய பூங்காக்கள்;
விளையாட்டுத் திடல்கள்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம்-சுப்பிரமணியம் சாலை மற்றும் பள்ளிக்கரணை, காமகோட்டி நகர்-6வது தெரு ஆகியவற்றில் 1.21 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 விளையாட்டுத் திடல்கள்;
என மொத்தம் 70 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வாகனங்களைப் பயன்பாட்டிற்கு வழங்குதல்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, ரேபிஸ் நோய் தடுப்பூசி போடுவதற்கு 6 நாய் பிடிக்கும் வாகனங்கள், கால்நடைகளைப் பிடிக்க 5 கால்நடை பிடிக்கும் வாகனங்கள், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை துண்டுகளாக்கி உடனுக்குடன் அப்புறப்படுத்திட ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் 3 மரக்கிளை நீக்கும் இயந்திரங்கள், வீடு வீடாகச் சென்று தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சேகரிக்கும் பணிகளுக்காக லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் 350 மூன்று சக்கர வாகனங்கள்;
என மொத்தம் 9.56 கோடி ரூபாய் மதிப்பிலான 364 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் 2465 கோடி ரூபாய் செலவில் 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பை உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio-Mining) முறையில் மீட்டெடுக்கும் பணிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்பொழுது, 342.91 ஏக்கர் பரப்பளவிலான கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம் 1980-ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து குப்பைகள் கொட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இங்கு திருவொற்றியூர், மணலி, மாதவரம், தேனாம்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய 8 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும், இங்கு மார்ச் 2022-ஆம் ஆண்டு ட்ரோன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 66.52 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை 648.38 கோடி ரூபாய் செலவில் உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio-Mining) முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் புதுப்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் பிரதான கழிவுநீர் குழாய்களை விரிவாக்கும் பணிகள்; கொளத்தூர் வார்டு-62-ல் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, அதனை நாவலர் நகர் கழிவுநீரிறைக்கும் நிலையத்திற்கு அனுப்புவதற்காக பிரதான உந்து குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் மேற்கு கூவம் ஆற்றின் கரையில் சாலையோர கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள்; பெருங்குடி மண்டலம், ஜல்லடியான்பேட்டை பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டம்;
என மொத்தம் 101.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
கொமாரபாளையம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளில் 13.12 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணிகள்; கும்பகோணம் மாநகராட்சி மற்றும் இராசிபுரம் நகராட்சியில் 39.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 வணிக வளாகம் கட்டும் பணிகள்; கொமாரபாளையம் நகராட்சியில் 9.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி;
தாரமங்கலம் மற்றும் அரியலூர் நகராட்சிகளில் 3.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய வார சந்தை அமைக்கும் பணிகள்; சிவகாசி மாநகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 3.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 நீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகள்; சோளிங்கர், ஆத்தூர், திருமங்கலம் மற்றும் மானாமதுரை நகராட்சிகளில் 142.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய குடிநீர் திட்டப் பணிகள்;
சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகள், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை நகராட்சிகளில் 588.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள்; தாம்பரம் மாநகராட்சி மற்றும் கொமாரப்பாளையம், கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகள்;
என மொத்தம் 813 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் 23 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பேரூராட்சியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம்; நாமக்கல் மாவட்டம் - மோகனூர் பேரூராட்சி, ஈரோடு மாவட்டம் - அந்தியூர் பேரூராட்சி, திருவண்ணாமலை மாவட்டம்- களம்பூர் பேரூராட்சி, மதுரை மாவட்டம் - பரவை மற்றும் பாலமேடு பேரூராட்சிகள், விருதுநகர் மாவட்டம் - சா. கொடிக்குளம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டம் - வத்தலக்குண்டு பேரூராட்சி, செங்கல்பட்டு மாவட்டம்- திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, தென்காசி மாவட்டம் - அச்சன்புதூர் பேரூராட்சி, சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் பேரூராட்சி, தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திக்குளம் பேரூராட்சி, ஆகிய பேரூராட்சிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 237.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள்;
என மொத்தம் 238 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!