Tamilnadu
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் : வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அறிக்கையில் தமிழ்கனவுகள் என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று 2024-25ம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சில:-
வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். உழவர்களை எப்போதும் உச்சத்தில் வைக்கிறது தமிழ்ச்சமூகம். அரசின் சீர்மிகு திட்டத்தால் தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பளவு உளர்ந்துள்ளது.
நடப்பாண்டில் 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2022-23ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஊழவர் சந்தைகள், மின்னணு சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படுகின்றன. 2020-2021 ஆம் ஆண்டில் 89.06 லட்சம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு, 2022 -23 ஆம் ஆண்டில் 95.39 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
மண்வளம் பேணிக்காக்கவும் மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல் முறைகளையும் ஊக்கப்படுத்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!