Tamilnadu
🔴LIVE | TN BUDGET 2024 - 25 : வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் - முக்கிய அம்சங்கள் இதோ..!
வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணினிமயமாக்கல் பணிகள்!
வெளிப்படைத் தன்மைக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ரூ.141 கோடி மதிப்பீட்டில் கணினிமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்படும்!
5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் தூர்வாருவதற்கு ரூ .110 கோடி நிதி!
தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன், காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் தூர்வாருவதற்கு ரூ .110 கோடியில், 919 பணிகள் மேற்கொள்ளப்படும்!
புவிசார் குறியீடு பெற ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு!
நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு!
உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு!
உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு!
250 மெட்ரிக் டன் கொள்ளவிலான நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் எளிதில் அறியும் வண்ணம் ‘தகவல் மையம்’ அமைக்கப்படும்!
மல்லிகை, பலா, மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றின் சாகுபடியினை ஊக்குவிக்க தோட்டக்கலை வல்லுநர்களால் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.
தோட்டக்கலைப் பயிர்களுக்கான திட்டங்கள், சாகுபடித் தொழில்நுட்பங்கள் போன்றவற்றின் தகவல்களை, விவசாயிகள் எளிதில் அறியும் வண்ணம் தகவல் மையம் அமைக்கப்படும்.
நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ. 773.23 கோடி நிதி ஒதுக்கீடு!
பாசன நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், பயிரின் உற்பத்தி, உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், 2.22 இலட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ. 773.23 கோடி நிதி ஒதுக்கீடு!
மொத்த சாகுபடி பரப்பு 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது!
வேளாண்மைக்கான தொலை நோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியதின் மூலம் 2020-21ஆம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 2022-23ஆம் ஆண்டில் 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
அரசால் செயல்படுத்தப்பட்ட சீர்மிகு திட்டங்களால், 2022-23ஆம் ஆண்டில் 116 லட்சத்து 91 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது.
பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கிட, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு!
பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கிட, ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம் என 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு!
புதிய இரகங்களுக்கான ஆராய்ச்சி பணிகள்!
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, சத்துக்கள் செறிவூட்டப்பட்ட நெல் இரகங்களை துரித இனப்பெருக்கம் மூலம் உருவாக்க ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வெங்காயம் ஆகிய பயிர் சாகுபடியில் இயந்திரமயமாக்குவதற்கு சாத்தியக்கூறு சோதனை செய்யப்படும்.
நிலசம்பங்கி, செவ்வந்தி, ரோஜாவில் புதிய இரகங்களுக்கான ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டுத் தண்டுகள், அமிழ்நீர் குட்டை, கசிவு நீர் குட்டை, செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள், மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு!
ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்!
நாட்டிலேயே முதன்முறையாக கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்பு (UPI) அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன் பெறுகின்றனர்.
1,380 வேளாண் இயந்திரங்கள் இ-வாடகை (உழவன் செயலி) மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 1,775 கோடி நிதி!
இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
”நம்மாழ்வார் விருது!”
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ”நம்மாழ்வார் விருது” வழங்க ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு!
"கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள்!"
பயிர் சாகுபடியில் அதிக உற்பத்தியும், அதிக வருமானமும் பெற, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க 2,482 கிராம ஊராட்சிகளில் "கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள்" உருவாக்க ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு!
பிற மாநில உயர் விளைச்சல் தரக்கூடிய நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள் போன்ற சான்று பெற்ற விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய நெல் ரகங்களுக்கான விதைகளை தமிழ்நாடு அரசு விநியோகிக்கும் புதிய திட்டம்!
2,482 கிராம ஊராட்சிகளுக்கு வேளாண் வளர்ச்சித் திட்டற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு!
ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்!
2,482 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்திட ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு!
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்!
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு!
விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்றிட 725 உயிர்ம வேளாண் தொகுப்புகள்!
சிறுதானியங்கள், பயிறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு!
விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்றிட 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு!
ஊட்டச்சத்துமிக்க பழங்கள், காய்கறி வளர்ப்பதை ஊக்குவிக்க நடவடிக்கை!
வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்துமிக்க பழங்கள், காய்கறி வளர்ப்பதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வாழை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற செடிகள் வழங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு!
தாவர வகைகளை நடவு செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு!
உயிரி பூச்சிக்கொல்லி பண்புகளுடைய ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை நடவு செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு!
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவல்ல சிவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் இரங்கள், 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட விதை விநியோகிக்கப்படும்.
2 லட்சம் விவசாயிகள் பயனடைய 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம்!
37,500 ஏக்கர் களர் நிலங்களைச் சீர்ப்படுத்த 7 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
2 லட்சம் விவசாயிகள் பயனடைய 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு!
5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள், 10 லட்சம் ஏக்கருக்கு, 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிட ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு!
2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு!
சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும்!
10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்க ரூ.6 கோடி ஒதுக்கீடு!
இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிவாரணம்!
“தென் மாவட்டங்களில் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட, பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 இலட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்!”
“முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டம்!
“முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற புதிய திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு!
உணவு தானிய உற்பத்தி 16 மெட்ரிக் டன்!
2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 16 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
2021 - 2021ம் ஆண்டில் 89.06 லட்சம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு, 2022-23ஆம் ஆண்டில் 95.36 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன!
கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் நடப்பாண்டில் 50 ஆயிரம் பாசன மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
”உழவர்களின் வளர்ச்சி பாதை!”
“வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். தமிழ் சமூகம் உழவர்களை எப்போதுமே உச்சத்தில் வைத்துள்ளது. விவசாயிகளின் நலனை பேணிக்காத்திட பல்வேறு சீர்மிகு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.”
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்!
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்”
என்ற திருக்குறளை மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது முதல் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்!
நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டது.
தமிழ்நாடு அரசின் 2024 - 25 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசின் வேளாண்துறை பட்ஜெட்டை மூன்றாவது முறையாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சென்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!