Tamilnadu
இந்தியாவிலேயே முதன்முறை - தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதமி : எந்த மாவட்டத்தில் தெரியுமா?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து பிப். 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து இன்று 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
விளையாட்டுதுறை
சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.
முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடெங்கும் நடத்தப்படும்.
33 விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் அடங்கிய கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.
தொழிலாளர் நலன்
10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள்:
கடலூர் மாவட்டம் வேப்பூர், திண்டுக்கல் குஜிலிப்பாறை, கிருஷ்ணகிரி போச்சப்பள்ளி, நாமக்கல் சேந்தமங்கலம், புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை, ராமநாதபுரம் கமுதி, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி, திருவாரூர் கூத்தாநல்லூர், திருவண்ணாமலை செங்கம், தூத்துக்குடி ஏரல் ஆகிய பகுதிகளில் 10 புதிய அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்கள் ரூ.111 கோடியில் தொடங்கப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு:-
மக்களைத் தேடி வருத்துவம் திட்டத்திற்கு ரூ.243 கோடி நிதி ஒதுக்கீடு.
அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேம்படுத்திட காப்பீடு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.200 கோடி செலவிடப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் இலவச சிகிச்சைக்காக உச்சவரம்புத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.64 கோடியில் மேம்படுத்தப்படும்.
அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
25 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதைப் பழக்க மீட்பு மையங்கள் ரூ.20 கோடியில் அமைக்கப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!