Tamilnadu
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024 : அரசுக்கு விவசாய சங்கங்கள் பாராட்டு!
தமிழ்நாடு 2024 - 2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பலனளிக்கும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தஞ்சை மாவட்டம் கல்லணை கால்வாய் பணிகளை மேம்படுத்த ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, தஞ்சையில் தொழிற்பூங்கா அமைக்க ரூ.120 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு விவசாயிகள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் அளித்த பேட்டியில், “கல்லணை கால்வாய் புணரமைப்பு செய்ய ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை வரவேற்கிறோம். இதன் மூலம் தஞ்சை மாவட்ட கடைமடை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி சாகுபடி சிறப்பாக அமையும். அதே போல் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிள்ளைகள் பயன் பெரும் வகையில் 120 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற் பூங்கா உள்ளிட்ட அறிவிப்புகளை மனதார வரவேற்கிறோம்” என்றார்.
தொடர்ந்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி செந்தில் அளித்த பேட்டியில், “ஏரி , குளங்களை தூர்வாருவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை வரவேற்கிறோம். மிகுந்த பயனை இத்திட்டம் அளிக்கும். ஒன்றிய அரசு நிதியுதவி செய்ய மறுத்து வரும் நிலையில், இக்கட்டான சூழ்நிலையிலும் தஞ்சை மாவட்டத்தில் தொழிற்பூங்கா உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்” என்றார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?