Tamilnadu
நாட்டில் ஜனநாயகம் தழைக்கப்பட வேண்டும் என்றால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது - அமைச்சர் சேகர்பாபு !
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சமய நல்லிணக்க பேரவை அமைப்பின் சார்பில் 'மதவெறி மாளட்டும் மனிதநேயம் ஆளட்டும் என்கின்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு ,செஞ்சி மஸ்தான் மற்றும் சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "நாட்டில் ஜனநாயகம் தழைக்கப்பட வேண்டும் என்றால், இன மதங்களுக்கு அப்பால் மனிதன் மனிதநேயத்துடன் வாழ வேண்டுமென்றால், ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும் என்றால், ஆகாதவர் என்ற நிலையில்லாமல் வாழ வேண்டுமென்றால், ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்றால், மீண்டும் பாரதிய ஜனதா கட்சி இந்த நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது
மதத்தால் இனத்தால் மொழியால் மக்களை பிளவுபடுத்தி மனிதனுக்கு மனிதனை அந்நியனாக்கி அதன் வாயிலாக தேர்தலில் வாக்குகளை பெறலாம் என்று துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கு இஸ்லாமிய பெருமக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க வேண்டும்
துறைமுகம் தொகுதியில் இஸ்லாமிய பெருமக்கள் 24,000 பேர் வாக்காளர்களாக இருக்கிறார்கள். ஆனால் நமக்கு கிடைக்கும் வாக்குகள் 12000 வாக்குகள் தான். வரும் தேர்தலில் இஸ்லாமிய பெருமக்களின் வாக்குகள் உறுதியாக கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல்"என்று கூறினார்.
பின்னர் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "இந்திய நாடு பன்முகம் கொண்ட நாடு. ஈரோடு இடைத்தேர்தலில் இஸ்லாமிய பெருமக்கள் நான் சொன்னதைக் கேட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி மாபெரும் வெற்றியினை பெற்று தந்தார்கள். அதேபோன்றுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் இஸ்லாமிய பெருமக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி மாபெரும் வெற்றியை தேடி தர வேண்டும்
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்கும் போது இந்தியாவிற்கு 56 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால், அது தற்போது 139 கோடி ரூபாய் கடனை நாட்டின் மீது சுமத்திருக்கிறார். இதுதான் நிர்வாகத்தின் சீர்கேடு. தனி மனிதனின் கடனாக 44,348 ரூபாயாக இருந்ததை இன்று 1 லட்சத்து 48 ரூபாயாக ஒவ்வொரு தனி மனிதனின் தலையில் கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும்" என்று கூறினார் .
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!