Tamilnadu
"உயிர்காத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்நாள் முழுவதும் நினைவு கூறுவேன்”- மூத்த பத்திரிகையாளர் உருக்கம்!
தனியார் தொலைக்காட்சியில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தவர்தான் சையது அப்துல் கனி. இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நிறைந்த விபத்தும், அதனால் தனக்கு நேர்ந்த சங்கடமும், அதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த உதவியையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது, "நான் பத்திரிகை துறையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றேன். என் மகனின் திருமண வேலை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஜன 23-ம் தேதி எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விபத்தில் எனது வலது கால் எலும்பு முறிந்தது. உடனே எனது மகனின் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தில் எனது குடும்பத்தார் சிகிச்சைக்கு என்னை அனுமதித்தனர்.
அன்று இரவே எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அதன்பிறகு இன்னொரு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு தற்போது நன்றாக இருக்கிறேன். ஆனால் அதற்கு எல்லாம் யார் காரணம்... ஒரு பத்திரிகையாளராக இல்லாமல், அரசு நிதி கிடைக்காத நிலையில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை நாடினேன்.
அவர் உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தின் பிரதிபலனாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஹஸீப் என்னை தொடர்பு கொண்டு பிரச்னையை கேட்டறிந்தார். அதன்பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு இந்த நிலைமையை கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறிய சில மணி நேரங்களிலேயே, எனது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பார்த்துக்கொள்வதாக கூறி, எனக்கு தைரியமும் கொடுத்தார். சொன்ன மறுநிமிடமே, எனது மகனிடம் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கொடுத்தார். அந்த உதவியினால்தான் எனது கால் மீண்டும் பெற்றுள்ளேன்." என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!