Tamilnadu

பாசிச பாஜகவுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிமுக செய்த துரோகங்கள் : வரலாறை திரும்பி பார்ப்போம்!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்தியா கூட்டணியைக் கண்டு பா.ஜ.க பீதியடைந்து ராமர் கோயில் திறப்பு போன்ற மதம் சார்ந்த விஷயங்களை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தல் பணிகளில் வேகத்தை காட்டி வருகிறது. தொகுதிப் பங்கீடுகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் கிடைக்கிற கொஞ்சம் வாக்கு கூட கிடைக்காது என்பதை உணர்ந்த அடிமை அதிமுக, பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. இதனால் பா.ஜ.க-வை எதிர்த்துப் பேசவேண்டிய நிலையில் அ.தி.மு.க இருந்து வருகிறது.

இவர்கள் இப்படி என்னதான் நாடகம் ஆடினாலும் ஒன்றிய பாசிச அரசுடன் சேர்ந்து கொண்டு அடிமை அதிமுக தமிழ்நாட்டிற்குச் செய்த துரோகங்களை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. பாஜகவுடன் சேர்ந்துகொண்டு அதிமுக, ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் செய்த துரோகங்களை நாம் சற்று திரும்பிப் பார்ப்போம்:-

* நீட் தேர்வுக்கு ஆதரவு

* உதய் மின் திட்டத்துக்கு ஆதரவு

* ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்துக்கு ஆதரவு

* பல்கலைக்கழக வேந்தர்களை ஆளுநராக நியமிப்பதற்கு ஆதரவு

* குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு (CAA)

* மூன்று வேளாண் சட்டத்துக்கு ஆதரவு

- இப்படி பாஜக பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. 'நானும் ஒரு விவசாயி' என்று சொல்லிக் கொண்டே மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தாரே பழனிசாமி. அது கொத்தடிமைத் தனத்தின் உச்சம் அல்லவா?

குடியுரிமைச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர்கள் அதிமுக என்ற கொடுங்கோலர்கள். அதிமுக உறுப்பினர்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்து இருந்தால் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆதரித்து வாக்களித்துவிட்டார்கள். இவ்வளவு பித்தலாட்டத்தையும் செய்துவிட்டு இன்றைக்குச் சிறுபான்மையினரின் வாக்குக்காக ரத்தப் பற்களோடு வருகிறார்கள்.

Also Read: ”வஞ்சக எண்ணம் கொண்ட ஒன்றிய பா.ஜ.க அரசு” : முரசொலி கடும் தாக்கு!