Tamilnadu
சபாநாயகர் முதல் அமைச்சர் வரை... செல்லூர் ராஜுவுக்கு கொடுத்த பதிலடியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை !
நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டதொடர் நேற்று (12.02.2024) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பேரவையில் சற்று சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஆளுநர் மீதான விவாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது நாளான ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று அதன் மீதான விவாதம் தொடங்கியது.
அப்போது கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் குறித்த விவாதம் நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது செல்லூர் ராஜு பேசியதாவது, “தமிழக மக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள். 'கேளம்பாக்கம்' பேருந்து நிலையத்தினால் தென் மாவட்டங்களை சேர்ந்த படிக்காத மக்கள் சென்னைக்கு வேலை தேடி வரும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதனால் அதற்கான தேவையான வசதிகளை மேலும் ஏற்படுத்துமாறு கேட்கிறேன்” என்றார்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு, “நல்ல கேள்வி... ஆனால் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவு படித்தவர்கள்...” என்று பதிலடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “தை மாத பிறப்பை புத்தாண்டு என்று ஏற்றுக்கொண்ட செல்லூர் ராஜுவுக்கு நன்றிகள். அண்ணன் செல்லூர் ராஜுவை பார்த்தாலே ஒட்டுமொத்த சபைக்குமே மிகுந்த மகிழ்ச்சி... நீங்கள் எழுந்து நின்றாலே எங்களுக்கு எல்லாம் ஆனந்தமாக இருக்கும்” என்றார்.
மேலும் பேசிய அமைச்சர், “அண்ணனுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் அது 'கேளம்பாக்கம்' அல்ல, கிளம்பாக்கம்... அதனை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்” என்று செல்லூர் ராஜுவுக்கு தெளிவாக எடுத்து சொன்னார். இதனால் சட்டப்பேரவையில் மிகுந்த சிரிப்பலை ஏற்பட்டது. அதோடு “பேருந்து நிலையத்தை அமைக்க கிளாம்பாக்கம் தேர்ந்தெடுத்தது அதிமுக ஆட்சியில்தான்” என்று அடுத்தடுத்து அடுக்கடுக்காக பதிலடி கொடுத்தார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !