Tamilnadu
இன்று தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்? : முழு விவரம் இங்கே!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது, தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்துள்ள உரையில் பல இடங்களில் நான் உடன்படவில்லை போன்ற உப்பு சப்பு இல்லாத காரணங்களை கூறி வேண்டும் என்றே தனது உரையை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு முழு உரையையும் வாசித்தார். அப்போது ஆளுநர் அவையிலேயே மிக இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார். பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என கூறிய ஆளுநர்தான் அவை மரபை மீறி தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறினார். தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் முழுமையாகப் புறக்கணித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "பிப்.22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும். நாளை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்படும்.
பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று அதன் மீதான விவாதம் தொடங்கும். பிப்.14 ஆம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். பிப்.15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை உள்ளது. பிறகு. பிப்.16,17,18 ஆகிய மூன்று நாட்கள் பேரவைக்கு விடுமுறை.
இதனைத் தொடர்ந்து பிப். 19 ஆம் தேதி 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல் பிப்.20 வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர் பிப்.21,22 ஆம் தேதி இரண்டு நாட்களும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!