Tamilnadu

“நாடாளுமன்றத்தில் பச்சைப்பொய் பேசி வருகிறார் நிர்மலா சீதாராமன்...” - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் !

ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது.

அதேநேரம் எதிர்க்கட்சிகளின் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமே வெறும் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் இந்த பாரபட்சத்தை கண்டித்து ர்நாடகா, கேரள அரசுகள் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருப்புச் சட்டை அணிந்து ஒன்றிய அரசுக்கு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும் ஒன்றிய பா.ஜ.க அரசு எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் அநீதி இழைத்து வரும் நிலையில் இந்திய அளவில் #BJPLootingOurTax என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.

தென் மாநிலங்களின் வரிப்பகிர்வின் வடமாநிலங்கள் செழிப்பதாகவும் எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இவ்வாறு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக இணையவாசிகளும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் நிதி பகிர்வை சுட்டிக்காட்டி போஸ்டர்களும், பேனர்களும் வைத்து ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்து விடுவதாக அமைச்சர் மனோதங்கராஜ் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது, “கடந்த காலங்களில் பாஜகவுடன் சேர்ந்து அதிமுக செய்த தவறுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் நிச்சயமாக வரும் தேர்தலில் அதிமுக-வை மக்கள் ஆதரிக்க போவதில்லை.

ஒன்றிய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், GST தொடர்பான தகவல்களுக்கு முற்றிலும் முரணாக பச்சைப்பொய் பேசி வருகிறார்." என்றார்.

Also Read: பஞ்சுமிட்டாய் விவகாரம் : ஆய்வுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !