Tamilnadu
”தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்து வரும் ஒன்றிய அரசு” : நாடாளுமன்றத்தில் வெளுத்து வாங்கிய திருச்சி சிவா MP!
இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி உரையாற்றினார்.
அப்போது பேசிய திருச்சி சிவா," மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வருகிறது. ஒரு ரூபாய் வரியில் தமிழகத்திற்கு 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசா திரும்பி வழங்கப்படுகிறது. ஏன் தமிழ்நாட்டுக்கு இந்த அநீதி?
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ. 37 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒன்றிய அரசு நிதியை ஒதுக்கவில்லை. ஆந்திராவிலும் இதே நிலைமைதான்.
குடியுரிமை மசோதாவில் ஏன் முஸ்லிம்களை விடப்பட்டார்கள்? இலங்கை விடப்பட்டது? 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் உள்ளார்கள். அவர்களுக்குக் குடியுரிமை இல்லை. முத்தலாக் சட்டம் கொண்டுவரும் அரசு ஏன் கைம்பெண்கள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர மறுக்கிறது? பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!