Tamilnadu

“முத்தமிழறிஞர் கலைஞர்தான் எங்களுக்கு ஆறுதலளித்தவர்...” - அர்ச்சர்கள் சங்க தலைவர் ரங்கநாதன் நெகிழ்ச்சி !

சென்னை வெப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள மணியம்மை அரங்கில் ஆரியர்கள் பிடியிலிருந்து கோயில்கள் மீட்பு அவசியமா ? அரசியலா ? என்கின்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நிகழ்த்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் பயிற்சி பெற்ற அட்சயர்கள் சங்க தலைவர் ரங்கநாதன், வழக்கறிஞர் வேயுறுதொளிபங்கன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் பேசியதாவது, “இன்றைய காலகட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டுமென்றால் அதற்கு கோயில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். அனைத்து சாதியினரும் அச்சராக வேண்டும் என்கின்ற சட்டத்தையும் அதே போல் பெண்களும் அர்ச்சகராக வேண்டும் என்கிற சட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திராவிட மாடல் அரசு செய்து காட்டியுள்ளது.

குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் மட்டும் 10 பெண்கள் தற்பொழுது அர்ச்சர்களுக்கான படிப்பினை படித்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நாங்கள் அர்ச்சகர் பள்ளியில் சேர்ந்து அர்ச்சகர் படிப்பினை முடித்து கோயில்களில் வேலைகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலை உண்டு. குறிப்பாக அனைத்து இந்து முன்னணி இயக்கங்கள் இந்து கட்சிகள் என பலரையும் சந்தித்தோம்.

ஆனால் முத்தமிழறிஞர் கலைஞர் மட்டுமே நான் மரணிப்பதற்குள் பிராமணர் அல்லாதவர்களையும் அர்ச்சகர் ஆக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என்றும், ஆகம விதி எனக் கூடிய ஒரு மிகப்பெரிய தவறு உள்ளது அதனை நான் திருத்தி காட்டுவேன் என்றும் கூறி எங்களுக்கு ஆறுதலளித்தவர். மாறாக வேறு எந்த தலைவர்களும் எங்களுக்கு வாக்குறுதியும் அளிக்கவில்லை உறுதி மொழியும் கொடுக்கவில்லை.” என்றார்.

Also Read: “பெரியார், அண்ணா சித்தாந்தம் இல்லையென்றால், இன்று நாம்...” - தமிழன் பிரசன்னா பேச்சு !