Tamilnadu

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் : தி.மு.க சார்பில் அமைதி பேரணி : அண்ணா நினைவிடத்தில் மரியாதை !

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப்பேரணியாகச் சென்று சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என தி.மு.க சார்பில் அறிவிப்பு வெளியானது.

அதன்படி, இன்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திருவல்லிக் கேணி - வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை' அருகில் தொடங்கிய இந்த அமைதிப்பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது.

அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

இந்த அமைதிப் பேரணியில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Also Read: சுயநிர்ணய உரிமையே எங்களின் தேவை: இறந்து 55 ஆண்டுகள்.. ஆனால் இன்றும் ஆள்கிறார் ‘அண்ணா’- சிறப்புக் கட்டுரை!