Tamilnadu

”ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை இன்று புதுப்பிப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து!

75வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதேபோல் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்வில் வீரதீரச் செயலுக்காக யாசர் அராபத், செல்வன் தே.டேனியல் செல்வசிங், சு.சிவக்குமார் ஆகியோருக்கு அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் முகமது ஜூபேருக்கும், முதலமைச்சர் சிறப்பு விருது ஆயி அம்மாளுக்கும், காந்தியடிகள் பதக்கம் கோ.ச.சாங்சாய், ப.காசி விஸ்வநாதன், முனியசாமி, பாண்டியன், ஜெ.ரங்கநாதன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினர்.

இந்நிலையில் ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை இன்று புதுப்பிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,"நமது இந்திய ஒன்றியத்தை வரையறுக்கும் மதிப்புகள் - பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஒற்றுமைக்கான நமது உறுதிப்பாட்டை இன்று புதுப்பிப்போம். வரும் ஆண்டு பிரிவினைக் கொள்கைகளை அகற்றி இந்தியாவின் உணர்வை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வை பரவட்டும். சக குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்." என தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னையில் 75வது குடியரசு தினவிழா : தேசிய கொடியை ஏற்றிவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!