Tamilnadu
“ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல அரசு செயல்பட முடியாது” - அமைச்சர் சேகர்பாபு !
அரசின் அனைத்து துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தினை கீழ் இன்று சென்னை சூளையில் அங்காளம்மன் கோவிலில் தெருவிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சியின் 78 ஆவது வார்டு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்காக, மக்களுடன் முதல்வர் என்னும் சிறப்பு முகாமினை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "அரசின் அனைத்து துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெறுவது தொடர்பான முகாம் துவங்கியுள்ளது. மிக்ஜாம் புயலால் ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் இன்று முதல் தடை செய்யப்படுகிறது. அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக செயல்படும். ஏற்கனவே இம்மாதம் 240-ம் தேதிக்கு பிறகு நாங்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்படுவோம் என அவர்கள் உத்தரவாதம் கொடுத்தனர். ஆகையால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல அரசு செயல்பட முடியாது. மக்களுக்கு ஏற்றார் போல்தான் அரசு செயல்படும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் சிக்கி இருந்த மக்களை மீட்பு மற்றும் நிவாரண பணியில் அரசுடன் இணைத்து செயலாற்றிய மீனவர்களை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கௌரவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை இராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வருகின்றனர்." என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!