Tamilnadu
”முதலில் மக்களை சந்திக்கிறோம்”: தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கூட்டத்திற்கு பிறகு கனிமொழி MP பேட்டி!
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு, அறிக்கை தயாரிப்புக்குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்துத் தேர்தல் வேலைகளை தி.மு.க தொடங்கி விட்டது.
நேற்று தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து இன்று தேர்தல் தயாரிப்புக்குழு ஆலோசனை நடத்தியது. தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் டி.கே.எஸ். இளங்கோவன, ஏ.கே.எஸ் விஜயன், கோவி செழியன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, கே.ஆர்.என். ராஜேஷ் குமார், எம்.எம்அப்துல்லா, சி.வி.எம்.பி எழிலரசன், எழிலன் நாகநாதன், மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை இக்குழுவினர் சந்தித்தனர். அப்போது பேசிய கனிமொழி MP," நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு இன்று ஆலோசனை நடத்தியது.
தமிழ்நாடு முழுவதும் சென்று தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த பிறகே தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். இதற்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அதேபோல் தேர்தல் அறிக்கையில் எது முதன்மையாக இருக்கும் என்பதும் அறிக்கைகள் தயார் செய்து முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு தெரிவிக்கப்படும். மேலும் தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டியது இல்லை. கதாநாயகியாகவும் இருக்கலாம்."என தெரிவித்துள்ளார்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !