Tamilnadu
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு : மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? - பெரிய தொகுதி எது?
தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது வருமாறு:-
01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 27.10.2023 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 27.10.2023 தேதியிலிருந்து 09.12.2023-ஆம் தேதிவரை பெறப்பட்டன.
மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13,88,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13,61,888 விண்ணப்பங்கள் (ஆண்கள் 6,17,623: பெண்கள் 7.43,803, மூன்றாம் பாலினத்தவர் 462) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 6,43,307 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 6,02,737 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (3,71,537), இறப்பு (1,33,477) மற்றும் இரட்டைப் பதிவு (97,723) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 3,23,997 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1,64,487, பெண்கள் 1,59,343, மூன்றாம் பாலினத்தவர் 167) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,18,90,348 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,03,96,330; பெண் வாக்காளர்கள் 3,14,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8.294 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,30.522, பெண்கள் 3.29,783 : மூன்றாம் பாலினத்தவர் 114). இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117- கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,62.612 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2.29.950 பெண்கள் 2.32.538, பாலினத்தவர் 124).
மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1.72,140 ஆவர். (ஆண்கள் 84,702, பெண்கள் 87,435; மூன்றாம் பாலினத்தவர் 3), இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,72,624 ஆவர் (ஆண்கள் 89,569 பெண்கள் 82,996 : மூன்றாம் பாலினத்தவர் 59).
22.01.2024 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 71 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் சிறப்பு சுருக்க முறைத்திருத்த காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,32,805 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளனர். 9. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது, பெயர் சேர்த்தலுக்காகபெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18-19 வயதுள்ள 5,26,205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும் https://elections.tn.gov.in வலைதளத்திலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!