Tamilnadu
”அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்” : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பதைப் போல ஆளுநருக்கு யாரைப் பார்த்தாலும் அப்படித் தோன்றுகிறது என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 20 திருக்கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஐந்து கோவில் வைணவ கோவில்கள்.
ரூ.100 கோடியில் பழைய கோயில்களை புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.153 கோடியில் கடந்த ஆண்டு திருப்பணிகள் நடந்துள்ளது. அதோடு 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ.100 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக ஆட்சியில் தான் 6721 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 756 திருக்கோவில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டம் நடைபெறுகிறது. 8 கோவில்களில் மூன்று வேலை அன்னதானம் வழங்கப்படுகிறது. பழனி, திருக்கோவிலூர், பொறுத்தவரையில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இன்று ராமர் திருக்கோவில் பூஜை நடைபெற்று வரும் வேளையில் இந்து அறநிலையத்துறை சார்பில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் எந்தவித பூஜைக்கும் தடை விதிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கோதண்டராமன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் திருமலை மற்றும் முள்ளங்குடி அருள்மிகு கோதண்டராமன் திருக்கோவிலுக்கு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
கோதண்டராமர் திருக்கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு எந்த குறையும் இல்லாமல்தான் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த ஆட்சியை பொறுத்தவரையில் யாருக்கும் எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது.
ஆளுநர் சொல்லும் நபர் அச்சத்திலிருந்தார் அவர் பக்கத்தில் அமர்வாரா ஆளுநர்?. அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பதைப் போல ஆளுநர் யாரைப் பார்த்தாலும் அப்படித் தோன்றுகிறது போல.
அந்த திருக்கோயிலின் வட்டாட்சியர் மோகன் தங்கள் எந்த விதமான அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை எனவும் தங்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் ஆன்மீகவாதிக்கும், இறையாண்மை வாதிகளுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஆட்சி திராவிடம் ஆடல் ஆட்சி இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!