Tamilnadu
கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்த அண்ணாமலை: விரட்டியடித்த இளைஞர்கள், பொதுமக்கள் - நடந்தது என்ன ?
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணலமாய் நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் அவர் தமிழ்நாடு முழுக்க யாத்திரை நடத்துவதாக காரில் சொகுசாக ஊர் சுற்றி வரும் அண்ணாமலையின் செயல் சிரிப்பையே ஏற்படுத்தி வருகிறது.
இந்த யாத்திரையின் போது மக்களை திரட்ட அவர்களுக்கு பணம், சேலை போன்றவற்றை வழங்குவதாக கூறி கூட்டத்தை அழைத்து வரும் பாஜகவினர், பின்னர் மக்களுக்கு எதுவும் கொடுக்காமல் திரும்பி அனுப்பும் செயலும் தொடர்ந்து வருகிறது
இந்த நிலையில், நேற்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வரும் வழியில் உள்ள பி.பள்ளிபட்டி பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த லூர்து அன்னை கிறித்துவ தேவாலயத்திற்கு அண்ணாமலையை பாஜகவினர் அழைத்து சென்றனர்.அப்போது அங்கிருந்த இளைஞர்களும் கிறிஸ்துவர்களும் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அங்கிருந்தவர்கள் புனிதமான இடத்தில் நீங்கள் மாலை போடகூடாது என்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகவும் மணிப்பூரில் கிருத்துவ மக்களுக்கு அநீதி இழைத்த பாஜகவினர், எங்களது தேவாலயத்திற்குள் வர அருகதையில்லை எனவும் கூறினார். மேலும், அண்ணாமலையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பாஜகவினரே வெளியேறு என தொடர்ந்து கோஷமிட்டனர்.
மேலும், அந்த பகுதி மக்களும் அங்கு திரண்டு வந்து அண்ணாமலை மற்றும் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இதனையடுத்து கூட்டத்தினரை சமாதானம் செய்த காவல்துறையினர் அண்ணாமலையை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். வேறு வழியின்றி அண்ணாமலையும் அங்கிருந்து வெளியேறினார்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !