Tamilnadu

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 : எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு ? - விவரம் உள்ளே !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.

அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2030-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 7, 8 (இன்று, நாளை) ஆகிய 2 நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இதில் உலக நாடுகள் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய திட்டமிட்டு அறிவித்துள்ளது.

குறிப்பாக ஹூண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கவும், விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு :

* First Solar :

முதலீடு ரூ.5600 கோடி - வேலை வாய்ப்பு 1,100 பேர் - காஞ்சிபுரம்

* JSW Renewable :

முதலீடு ரூ.12000 கோடி - வேலை வாய்ப்பு 6,600 பேர் - தூத்துக்குடி & திருநெல்வேலி

* Tata Electronics :

முதலீடு ரூ.12,082 கோடி - வேலை வாய்ப்பு 40,500 பேர் - கிருஷ்ணகிரி

* TVS Groups :

முதலீடு ரூ.5,000 கோடி - வேலை வாய்ப்பு 500 பேர்

* Mitsubishi :

முதலீடு ரூ.200 கோடி - வேலை வாய்ப்பு 50 பேர் - திருவள்ளூர்

* Hyundai :

முதலீடு ரூ.6,180 கோடி - காஞ்சிபுரம்

* Vinfast :

முதலீடு ரூ.16,000 கோடி - தூத்துக்குடி

* Godrej Consumer :

முதலீடு ரூ.515 கோடி - செங்கல்பட்டு

* Pegatron :

முதலீடு ரூ.1000 கோடி - வேலை வாய்ப்பு 8000 பேர் - செங்கல்பட்டு

இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அறிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

Also Read: ரூ.400 கோடி முதலீடு.. 2000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!