Tamilnadu
உலக முதலீட்டாளர்கள் மாநாடு : மாற்றுத்திறனாளிகள் & LGBTQ-க்கு 5% வேலைவாய்ப்பு - Godrej நிறுவனம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் (7,8.01.2024) ஆகிய 2 நாட்களில் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்று முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், இது அதற்கு புள்ளியாக அமையவுள்ளது.
தொடர்ந்து இன்று நடைபெற்ற மாநாட்டில் Tata, Godrej, Mitsubishi, TVS, Vinfast உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கோடி கணக்கில் தமிழ்நாட்டில் முதலீடு மற்றும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த சூழலில் இதில் கோத்ரெஜ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்திருக்கிறது.
அதாவது செங்கல்பட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பம் ஆனது. இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்திருக்கிறது.
அதன்படி இன்று நடைபெற்ற உலக முதலீட்டார்கள் மாநாட்டில், இந்த ஆலையில் 50% பெண்களுக்கும், 5% LGBTQ (மாற்று பாலினத்தவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா அறிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!