Tamilnadu
பெரியார் பல்கலை. துணைவேந்தர் வழக்கில் அதிரடியில் இறங்கிய போலிஸ்: அடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள் யார்?
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள் தொடங்கிய தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாக பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.
அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தலைமறைவான பதிவாளர் மற்றும் துணை பேராசிரியர் சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதனிடையே பூட்டர் பவுண்டேஷன் செயல்பாடு மற்றும் அதில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பாக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாளர்களான பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, துணை பேராசிரியர்கள் நரேஷ் குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் நிலையம் வரவழைத்து காவல் உதவி ஆணையர் நிலவழகன் விசாரணை மேற்கொண்டார்.
இதில் பூட்டர் பவுண்டேஷன் நிறுவனமானது சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் பயிற்சிக் கல்வி, ஆராய்ச்சி கல்வி அளிப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பூட்டர் பார்க் நிறுவனம் மூலம் சென்னையில் உள்ள தீபம் எஜூடெக் பிரைவேட் லிமிடெட், மீடியா அண்ட் எண்டர்டைன்மென்ட் ஸ்கில்ஸ் கவுன்சில், மோனோலித் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஆக்டிவ் எஜு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், இண்டியா டர்ன்ஸ் பிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மற்றும் பூட்டர் பவுண்டேஷன் மூலம் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சேலம் விநாயக மிஷன் ரிசர்ச் சென்டர் பவுண்டேஷன் ஆகிய கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்த நிறுவனங்களுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேர்மன் ஆகவும் மற்றும் பதிவாளர் தங்கவேல் சிஈஓ- வாகவும் உள்ள பியூட்டர் பார்க் மற்றும் பியூட்டர் பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணம் எவ்வளவு செய்கிறார்கள், மாணவர்களுக்கு எந்த வகையில் கல்வி வழங்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணைகளில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்டோர் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானால் , துணைவேந்தரிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரும், அவரைச் சார்ந்தவர்களும் விரைவில் கைது செய்யப்படலாம்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !