Tamilnadu
”வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் கதவைத் தட்டும் இடம் தமிழ்நாடு” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
சென்னை IIT ஆராய்ச்சி பூங்காவில் 'என்விசன்' என்ற தலைப்பில் இந்தியாவின் முதன்மை எரிசக்தி மாநாடு இன்று தொடங்கியது. இம்மாநாட்டை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலில் தேர்வு செய்யும் இடமாகத் தமிழ்நாடுதான் உள்ளது. அனைவருக்கும் அனைத்தும் என்ற திராவிட மாடல் அரசின் பெரும் உந்துதலாக அடுத்த வாரம் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாடு அமைய உள்ளது.
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் அனைத்து நிறுவனங்களும் முக்கியத்தும் கொடுக்கப்படும். ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்தும் அங்கி இருக்கும் சில நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்கின்றன. நீடித்த ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருக்கும்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருச்சியில் விமான நிலைய திறப்பின் போது பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான நிதி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதையும் அறிவிக்காமல் சென்றுவிட்டார். இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான பேரிடர் நிதி குறித்து வலியுறுத்துவார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!