Tamilnadu
பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கிய விவகாரம் : மாஜிஸ்ட்ரேட் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் ஜெகநாதனின் பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தது.
இந்த சூழலில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர் அரசு அனுமதி பெற்று சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிரடியாகச் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலிருந்த துணை வேந்தர் ஜெகநாதனை கடந்த டிச.26ம் தேதி போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு சேலம் மாஜிஸ்ட்ரேட் ஜாமீன் வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "மாஜிஸ்ட்ரேட், நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்தது தவறு. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழும் வழக்கு பதிந்துள்ளதால், சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்ட்ரேட் எடுக்க முடியாது"என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாஜிஸ்ட்ரேட்டுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஜனவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!