Tamilnadu

வாயுக் கசிவு : எண்ணூரில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு!

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கோரமண்டல் கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு கடலில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கப்பலில் கொண்டு வரும் அம்மோனியா கேஸ் அனுப்பப்படுகிறது. அந்த அமோனியம் கேஸ் வாய்வு தொழிற்சாலையில் உள்ள 15,000 டன் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு கெமிக்கல் உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடலில் உள்ள குழாயில் திடீர் என கசிவு ஏற்பட்டு சுமார் 20 நிமிடம் அமோனியா கேஸ் வாய்வு கடலில் பரவி காற்றின் வேகத்தால் அருகில் உள்ள பெரிய குப்பம், சின்ன குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அமோனியா கேஸ் பரவியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது சில பேர் மயக்கம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி மாநகர காவல் துறை இணை ஆணையர் , சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்வதற்காக 20க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலைகள் உள்ள பேருந்துகளை வரவழைக்கப்பட்டு பொதுமக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பித் தங்க வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில் வாயு கசிவை ஊழியர்கள் சரி செய்துள்ளது. இந்நிலையில் வாயுக் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வாயுக் கசிவு குறித்து ஆய்வு செய்யக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தொழிற்சாலையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Also Read: எண்ணூரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு : அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கை!