Tamilnadu
முறைகேடு புகார்: கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் சிகிச்சை!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் ஜெகநாதனின் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தது.
இந்த சூழலில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர் அரசு அனுமதி பெற்று சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிரடியாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்த துணை வேந்தர் ஜெகநாதனை நேற்று (26.12.2023) போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பவுண்டேஷன் பெயரில் 10 தனியார் நிறுவனங்களுடன் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் என்ற அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பூட்டர் பவுண்டேஷனின் நிர்வாகிகளான பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு மற்றும் கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட ஜெகநாதன் சேலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 7 நாட்கள் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 7 நாட்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஜெகநாதனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது 7 நாட்கள் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கே அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜெகநாதனின் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக கூறி ICU-வில் அனுமதித்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!