Tamilnadu
தூத்துக்குடி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் : பிறந்த குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் மக்கள் குடியிருப்புகளில் புகுந்தது. இதையடுத்து மக்களை மீட்கும் களத்தில் கடந்த 18ம் தேதியில் இருந்தே கனிமொழி இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு தேங்கி உள்ள மழைநீர் வெள்ளத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி ஸ்ரீ வைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சியில் அபிஷா என்ற கர்ப்பிணிக் பெண் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கனிமொழி எம்.பி அவர்களது உதவி எண்ணிற்று தொலைபேசி வந்துள்ளது.
இதையடுத்து உடனே கனிமொழி எம்.பி தனது காரை வெள்ள நீர் சூழ்ந்த பகுதியான கொற்கை ஊராட்சிக்கு அனுப்பிவைத்தார். பிறகு மூன்றாம் தளத்திலிருந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பத்திரமாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அன்றைய தினம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.
வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் தவித்த கர்ப்பிணிக்குப் பெண்ணிற்குக் கனிமொழி எம்.பி. உதவியதன் வாயிலாக சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடிந்தது. பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தானும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்.பி தான் காரணம் என்றும் அபிஷா மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று அபிஷா மற்றும் அவருக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சந்திக்க அவரது இல்லத்திற்குக் கனிமொழி சென்றார். அப்போது குழந்தை கையில் வாங்கி, பெற்றோர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அக்குழந்தைக்குக் கனிமொழி என பெயர் வைத்தார்.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!