Tamilnadu
“அந்த பயம் இருக்கணும்.. பெரியாரின் பெயரை உச்சரித்த உடனே” : நாடாளுமன்ற நிகழ்வை விவரித்த எம்.எம்.அப்துல்லா!
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளும் தொடரும் அறைக்குவல்களும் என்கின்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் திராவிட கழகத்தின் தலைவர் பேராசிரியர் கே வீரமணி எழுதிய உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறுபுத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் தி.மு.க எம்.பி எம்.எம்.அப்துல்லா, திராவிட தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், கவிஞர் கலிப்பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் எம்.எம்.அப்துல்லா பேசியதாவது, ”நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தந்தை பெரியாரின் பெயரை உச்சரித்த அடுத்த கணம் அங்கு உள்ளவர்களின் வாயில் பச்சை மிளகாய் திணித்தது போல பேச விடாமல் தடுத்தார்கள். தந்தை பெரியார் கூறிய கருத்துக்களை மாநில சுயாட்சி என்பதை மட்டும் நான் நாடாளுமன்றத்தில் கூறினேன். ஆனால், அவர்கள் என்னை ஒரு பிரிவினைவாதியை போல சித்தரித்து பார்த்தார்கள். அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பலம் வழங்கியது இந்த பெரியார் திடல் தான்.
முன்பு தமிழகத்தில் இருந்த 5 பெரும் இயக்கங்களில் இந்துத்துவ இயக்கம் என்பது ஆப்கானிஸ்தான் முதல் பாரதமாக்க வேண்டும் என கொள்கையை கூறி வருகிறார்கள். அப்படி அவர்கள் செய்தால் இஸ்லாமியர்கள் தான் அதிக பெரும்பான்மையினர் பெறுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் திராவிட இயக்கத்துடன் ஒன்றிணைந்து அதன் கொள்கைகளை புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே பல்வேறு ஆட்சி மாற்றங்கள் பல மாநிலங்களில் ஏற்படும். இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய இடத்தில் இன்று நாம் தான் உள்ளோம். திராவிட மொழி என்பது தந்தை பெரியார் கூறியது எல்லாருக்கும் எல்லா சமூக உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், “வாழ்க்கை முழுவதும் தன்னைப் பற்றி சிந்திக்காமல் மக்களைப் பற்றி சிந்தித்தவர் தான் தந்தை பெரியார். எங்கள் அரசியல் அறம் சார்ந்தது நேர்மை சார்ந்தது என்பதால் எதையும் மறைக்காமல் எந்த வரலாற்றையும் மறைக்காமல் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு நமது பேராசிரியர் வெளியிட்டுள்ளார். திராவிடம் என்பது ஒரு கருத்து ஒரு கொள்கை அது தமிழகத்தில் வேறு ஒன்றிய ஒரு கருத்து. யாரெல்லாம் சமத்துவத்தை ஏற்றுக் கொள்கிறானோ அவன் ஒரு திராவிடன்.
அன்றைய காலகட்டத்தில் தி ஹிந்து நாளிதழ் பெரியாரைப் பற்றி பல கருத்துக்களை தெரிவித்திருந்தது ஆனால் இந்த நிலைமையில் இன்று நம்முடன் நெருங்கி வர திராவிட கருத்தை ஒரு மிகப்பெரிய காரணம். பெருந்தலைவர் காமராஜர் பேரறிஞர் அண்ணா பல தலைவர்களிருந்தும் யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காத ஒரே தலைவராக தந்தை பெரியார் இருந்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!