Tamilnadu
இரத்தம் - தக்காளி சட்னி... “இதுதான் பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்” - செல்வப்பெருந்தகை விமர்சனம் !
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் மக்களவையில் புகுந்து புகைக்குண்டுகள் வீசி முழக்கம் எழுப்பினர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து நாடு முழுவதும் கேள்விகள் எழுகிறது. மேலும் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பினர்.
இதனால் நேற்று வரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த சுமார் 146 எம்.பி-க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். தொடர்ந்து எதிர்கட்சிகளின் குரலை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், இந்த சம்பவத்துக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள இந்தியா கூட்டணி கட்சியினர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்களது கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை பேசுகையில், "இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கலவரம் செய்ய வந்தவர்களுக்கு அனுமதி வழங்கியது ஒரு பாஜக எம் பி. இது குறித்து வாதம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த எம்.பி.-க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நடைபெற்றது.
வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ள நிலையில் இதுவரை நிதி வழங்காமல் மாற்றாந்தாய் மனதுடன் மோடி அரசு தமிழ்நாட்டை பார்க்கிறது...இனியும் தாமதிக்காமல் வெள்ள பாதிப்புக்கு தேவையான நிதியை விரைந்து வழங்க வேண்டும்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஜனநாயகத்தை மதிப்பதில்லை. ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது கூக்குரல் போட்டார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி பற்றி பேசவில்லை. பாஜக-வினருக்கு வந்தால் ரத்தம், நமக்கு என்றால் தக்காளிச்சட்னி என்பதுபோல் இருக்கிறது பாஜக, ஆர்.எஸ்.எஸ் செயல்." என்றார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?