Tamilnadu
10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வில் மாற்றமா ? : அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுவது என்ன ?
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வினா வங்கி (Question Bank) புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். மேலும் பொது மக்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இரண்டாம் படி, இடமாற்று சான்றிதழ்களை 15 நாள்களுல் பெறும் வகையில் இணைய சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, "வரலாறு காணாத மழையால் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதோடு, மாணவர்களின் புத்தகங்களும் நனைந்து இருக்கிறது. பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.
பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டதற்கு பின்பாக விதமான நோய்தொற்றுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்போடு பள்ளிகள் திறக்கப்படும். மேலும் அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்பட வேண்டியது இருப்பதோடு, விடுமுறையும் அளிக்க வேண்டியது இருப்பதால், அனைத்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமும் இல்லை" என்றார்.
தென்மாவட்டங்கள் கனமழைக்கு முன்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தற்போது புது புத்தகங்கள் வழங்ப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென்மாவட்டங்களில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது வெள்ளம், மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் அதிகாரிகள், அமைச்சர்கள், திமுகவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !