Tamilnadu
"இந்திய வானிலை மையத்தின் அறிவிப்புகளில் துல்லியத்தன்மை இல்லை" - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் !
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர். இவ்வாறு தமிழ்நாடு அரசின் தீவிர செயல்பாடு காரணமாக சென்னை பெருவெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் காக்கப்பட்டனர்.
ஆனால், இந்த மிக்ஜாம் புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்திய வானிலை மையம் முறையான முன்னறிவிப்பை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு முன்பே முறையான முன்னறிவிப்பை வழங்கியிருந்தால் இதை விட அதிகளவு முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டிருக்கும். இது குறித்து முதலமைச்சரும் விமர்சித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகனமழை பெய்தது. இதிலும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவு கனமழை பெய்தது.
இந்த நிலையில், இந்த பேரிடர்களை முன்கூட்டியே துல்லியமாக இந்திய வானிலை மையம் கணித்திருந்தால் எச்சரிகையாகச் செயல்பட்டிருக்கலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், "தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, நமது வானிலை ஆய்வுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழ்நாடு அரசு கணிசமான முயற்சிகளை மேற்கொண்டாலும், எதிர்பாராத பேரிடர்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அறிவிப்புகளில் துள்ளியதன்மை இல்லை. இந்தப் பெரிய இழப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாகக் கணித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மக்களின் சொத்துகள் அதிகம் சேதமாகாமல் தடுத்திருக்கலாம்.
மக்களையும் பெரிய பாதிப்பில் சிக்கவிடாமல் தவிர்த்திருக்கலாம். காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய ஒரு பிரச்சினை. அது இப்போது நம்மை நேரடியாகப் பாதித்திருக்கிறது. வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்தது ஒரு பிரச்சனை.
மேற்கத்திய பாணியில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை வைத்து, வெப்பமண்டல நாடுகளில் துல்லியமாக கணிப்பது கடினமானது. ஆகவே நமது வானிலை ஆய்வு மையத்தின் அணுகுமுறையில் மறுசீரமைப்பு தேவை. சமீபத்திய காலமாக அதிகரித்து வரும் காலநிலை நெருக்கடிது ஒரு உலகளாவிய பிரச்சினை, இது இப்போது இந்தியாவில் நேரடியாக நம்மை பாதிக்கிறது. ஒன்றிய அரசு நமது அணுகுமுறையை மறுசீரமைத்து, முன்கணிப்பு மாதிரிகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இத்தகைய பேரழிவுகளை முன்னறிவிப்பதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும், அவற்றின் அழிவுகரமான விளைவுகளைக் குறைப்பதற்கும் நாம் சிறப்பாகத் தயாராக இருக்க வேண்டும். இது கூட்டுப் பொறுப்பு மற்றும் செயலுக்கான நேரம், இந்த சவாலை ஒன்றாக எதிர்கொள்ள நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!