Tamilnadu
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு : துணை நின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை !
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.சீனவாசா பள்ளி வளாகத்தில் மழைநீரானது தேங்கியுள்ளது. இத்னால் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு மழைநீரை அகற்றுவதற்கான பணியை மேற்கொண்டார். இதனை மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள், அதன் வடிகால் மற்றும் மழைநீர் வெளியேற்றுவதற்கான வழிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி உடனடியாக தேங்கியுள்ள நீரை அகற்றவும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மணல் கொட்டி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டும் சரி செய்யப்பட்டு வரும் பணிகளையும், மோட்டார் இயந்திரங்கள் கொண்டு நீரை வெளியேற்றும் பணியினையும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி தெரிவித்தாதவது, “காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை இந்த மழையில் பெருமளவு நீர் தேங்காத நிலை ஏற்பட்டது. மேலும் மஞ்சள் நீர் கால்வாய் ரூ.40 கோடியில் புனரமைக்க உள்ளதால் வருங்காலங்களில் மாநகரில் மழை நீர் அனைத்தும் உடனடியாக வெளியேறும் நிலை உருவாகும். தற்போது தற்காலிகமாக நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் எந்த ஒரு சிரமத்திற்கு உள்ளாகவில்லை.
முதலமைச்சரின் நடவடிக்கையால், புயலால் தேங்கிய மழைநீர் பல இடங்களில் துரிதமாக அகற்றப்பட்டது. சில இடங்களில் தேங்கிய மழைநீரானது, அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததுதான். காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை பெரிய பாதிப்பு இல்லை. பாதிப்பு இருந்த பகுதிகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு சரிசெய்யபட்டுள்ளது.
மேலும் மழை செல்லும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு அரசு அதிகாரிகள் துணை நின்றது தெரிய வந்தால், அது குறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய முடியாது என்பதால் அவர்களுக்கு உரிய இடமளித்து நீர்நிலைகள் காக்கப்படும்.” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!