Tamilnadu
மிக்ஜாம் புயல் - மூன்றாவது நாளாக களத்தில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் தி.மு.கவினர்!
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.
மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்து மழை தண்ணீர் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்றும் அமைச்சர்கள் மற்றும் தி.மு.கவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திரா காந்தி நகர் கால்வாயில் கழிவுகள் அடைத்துக் கொண்டது. பின்னர் சென்னை மாநகராட்சி 36 வது வார்டு திமுக கவுன்சிலர் கால்வாயில் இறங்கி துப்பரவு தொழிலாளர்களுடன் இணைந்து கழிவுகளை அகற்றினார். இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கவுன்சிலருக்கு நன்றி தெரிவித்தனர். சட்டையில் சின்ன கறை படியாதவர்கள் மத்தியில் சாக்கடையில் இறங்கிய தி.மு.க கவுன்சிலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அதேபோல் அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் சீர் செய்யப்பட்ட மழைநீர் வடிகால் பணியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை நேரில் சென்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார்.
துறைமுகம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து மழைநீர் வெளியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வி.பி ராமன் சாலை, இலாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் எ.வ.வேலு, வேளச்சேரி பகுதிப் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு மேற்கொண்டு, JCB மூலம் நேரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை திடீர் நகர், கோதா மேடு, சலவையாளர் காலனி , அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து அப்பகுதியில் உள்ள 7000 குடும்பங்களுக்கு தலா ஒரு லிட்டர் பால் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
இப்படிக் கடந்த மூன்று நாட்களாக அமைச்சர்கள் மற்றும் தி.மு.கவினர் இரவு பகல் பாராமல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது மின்னல் வேக நடவடிக்கை காரணமாகச் சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!