Tamilnadu
மக்களே எச்சரிக்கை : டிச 3, 4 தேதிகளில் 60 கி.மீ வேகத்தில் வீசுப்போகும் காற்று ! - வானிலை ஆய்வு மையம் !
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு :
“தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 440 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 580 கி.மீ., தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே தென்கிழக்கு 670 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4 ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும். அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5 அம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும் என தெரிவித்தார்.
வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஓரிடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
* 3 ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும். அதேபோல, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
* டிசம்பர் 4- ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
* 3 ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* 4 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடலூர் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
* மேலும், விழுப்புரம், புதுவை, கடலூர் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
* டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக கடலோரப் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவர்கள் அப்பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
* தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 முதல் இன்று வரையுள்ள காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 34 செ.மீ, இந்த காலகட்டத்தில் சராசரி அளவு 36 செ.மீ. அதே போல் சென்னையை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவு 67 செ.மீ பெய்யவேண்டும். ஆனால் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 60 செ.மீ., ஆகும். இது இயல்பை விட 7 சதவீதம் குறைவாகும்.”
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!