Tamilnadu
“10 ஆண்டுகால ஆட்சியில் எதையும் செய்யாமல் அதிமுகவினர் கேள்வி கேட்பது நியாயமா ?” - அமைச்சர் கே.என்.நேரு !
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் ஆலோசனைக்கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிட அரங்கில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே. என் நேரு பொதுமக்கள் புகார்களை கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை தயாராக இருப்பதாகவும், இறுதியாக பெய்த மழையில் 38 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் அவை முழுமையாக அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுமையாக தயாராக உள்ளது. புயல் கரையை கடந்து முடியும் வரை பொதுமக்கள் பூங்காக்கள் மற்றும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம். மழைநீர் வடிகால்வாய் குறித்து எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏற்கும் வகையில் இல்லை.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் மழை நீர் வடிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எதையும் செய்யாமல் இருந்த அதிமுகவினர், எங்களை பார்த்து குறை சொல்வது நியாயமா?. பொதுமக்கள் புகார்களை கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை தயாராக இருக்கிறது.
இறுதியாக பெய்த மழையில் 38 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில், அவை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. வடக்கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான ஆட்கள் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மழை நீர் வடிகால்வாய் பணி முடியும் தருவாயில் இருப்பதன் காரணத்தினாலும், மழைநீர் வடிகால்வாய்களில் குப்பைகளை தூர்வாரத காரணத்தினாலும், மழைநீர் சில இடங்களில் தேங்கியது. குப்பைகளை தூர்வாரும் வகையில் முழுயாக பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!