Tamilnadu

மொழி திணிப்பு : “இதனை வடமாநிலத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..” - ஆர்.எஸ்.பாரதி பேச்சு !

சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகே தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக் கூறியும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய கூறியும் பல முழக்கங்களை முன்னிறுத்தி பல்வேறு கட்சிகளை சார்ந்த சார்ந்தவர்கள் தொடர் முழுக்க கூட்டங்களை நடத்தினர். இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, எம்.பி கிரிராஜன், மதிமுக மாநில பொருளாளர் செந்தில் தீபன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, “சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றக் கூறி பலமுறை ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழனை வழக்காடும் முறையாக உயர்நீதிமன்றத்தில் அறிவிக்க ஒன்றிய அரசு தயங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அண்ணா தமிழ்நாடு என பெயர் உச்சரித்த பொழுது சட்டப்பேரவையில் இருந்த அனைவரும் தங்களது கைதட்டல்களை எழுப்பினார்கள். ஆனால் வெங்கட்ராமன் மட்டும் அதனை எதிர்ப்பு தெரிவித்தார். மெட்ராஸ் மாகாணம் என கூறினால் மட்டுமே நமக்கு பெருமை என கூறினார்கள். ஆனால் சென்னை என்று மாற்றம் செய்யப்பட்ட பின்பு இங்கிருந்து போனவர்கள் தான் உலக அளவில் பெரிய ஆட்களாக உள்ளார்கள்.

மெட்ராஸ் ஹைகோர்ட் என்கின்ற வார்த்தையை சென்னை உயர்நீதிமன்றம் அல்லது தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என கூறினால் என்ன தப்பு இருக்கிறது. எனவே தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு உணர்வு கம்மி ஆகிவிட்டது என்பதை நான் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஆணும் பெண்ணும் சம்பாதிக்க ஆரம்பித்த நிலை வந்தவுடன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று மட்டுமே அனைவரும் எண்ணுகிறார்கள். ஆங்கிலம் என்று கூறி தமிழை எங்கெல்லாம் புறக்கணிக்கிறார்களோ அங்கே எல்லாம் எழுச்சி உருவாக வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத்திலேயே சட்டம் இயற்றி அனுப்பினார்.

18 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதற்கு விடிவுகாலம் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே நமது முதல்வர் தற்பொழுது மீண்டும் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி அனுப்பியுள்ளார். நீதிமன்றத்தில் இந்தியில் வழக்காடு பொழுது ஒத்துக்கொள்ளக் கூடியவர்கள் தமிழில் வழக்காடினால் என்ன குறை வந்துவிடப்போகிறது. இதற்கான மாறுதல் தமிழ்நாட்டில் தற்பொழுது மேலோங்கி உள்ளது.

இதனை நாம் மிகவும் வேகமாக போராடி பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. பலவேறு மாற்றங்களை ஒன்றிய அரசு தற்போது அமல்படுத்தி வருகிறது இன்னும் சிறிது காலம் மௌனம் காத்தாலும் இந்தியில்தான் அனைத்து வழக்கங்களும் வழக்காட வேண்டும் என்கின்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடுகின்ற மொழியாக மாற்றியாக வேண்டிய கால கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது.

குறிப்பாக சட்டங்களுக்கு இந்தியில் பெயர் மாற்ற நாம் அனுமதி அளிக்க கூடாது. நம் மீதும் நம் மொழி மீதும் கை வைத்தால் விளைவுகள் பலமாக இருக்கும் என்பதனை வடமாநிலத்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 2004 ஆம் ஆண்டு தமிழுக்கு செம்மொழி அந்த சினை தமிழ்நாடு அரசு பெற்றதைப் போல இதையும் தமிழ்நாடு அரசு கூடிய விரைவில் பெறும்.” என்றார்.

Also Read: “ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது; வெறும் NOMINEE தான்..” -RN ரவிக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!