Tamilnadu
”எங்கள் மொழியை இழிவுபடுத்தி விட்டார்” : நடிகை குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார்!
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடிகை திரிஷா குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இதற்கு நடிகை திரிஷாவும் சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் நடிகர்கள் பலரும் நடிகர் மன்சூர் அலிகான், ”தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
அந்த வகையில், நடிகையும் பா.ஜ.க தலைமையின் ஆதரவால் மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பு சமூகவலைதளத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கு ஆதரவு வந்த அதே நேரம் எதிர்ப்பும் எழுந்தது. சிலர் சமூகவலைதளத்தில், "மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டபோது கருத்து தெரிவிக்காமல் தற்போது நடிகை என்பதால் திரிஷாவுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா?" என நடிகை குஷ்புக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதைப் பார்த்து ஆவேசமடைந்த அவர், "உங்களைப் போன்று சேரி மொழியில் என்னால் பேச முடியாது" என தனது கருத்துக்கு எதிர் வினையாற்றியவர்களை விமர்சித்திருந்தார் குஷ்பு. இதையடுத்து சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நடிகை குஷ்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் நடிகை குஷ்பு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதில், "தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் X சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என்று சொல்லி பதிவிட்டது என்னையும் நான் சார்ந்திருக்கின்ற தலித் மக்களையும் 2000 ஆண்டு காலமாக எமது மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் பேசுகின்ற மொழியை கேவலப்படுத்தி உள்ளார். மிகுந்த மனஉளச்சலுக்கும் மனவேதனைக்கும் எனக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் மொழியால் சேரியில் பேசுகின்ற மொழி வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்டத்தகாத மொழி என்றும் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி X சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பு மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!