Tamilnadu

383 காவலர்கள் - ரூ.60 கோடி நிதி : காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு : முதலமைச்சர் அதிரடி ஆக்‌ஷன்!

ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப் பிரிவைத் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.60 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கு காவல் துறையிலிருந்து 190 பேரை தோ்வு செய்து கொள்ளலாம். மேலும், அமைச்சுப் பணியாளா் இடங்களையும் புதிதாக உருவாக்கி கொள்ளலாம். புதிதாக உருவாக்கப்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவானது டிஐஜி தலைமையில் செயல்படும்.

இப்பிரிவில் 4 காவல் கண்காணிப்பாளா்கள், 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 13 துணைக் கண்காணிப்பாளா்கள், 31 காவல் ஆய்வாளா்கள், 61 உதவி ஆய்வாளா்கள், 12 தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளா்கள், 130 தலைமைக் காவலா்கள், 93 காவலா்கள், 33 காவல் துறை ஓட்டுநா்கள் ஆகியோா் பணியாற்ற உள்ளனா்.

Also Read: ‘கலைஞர் 100’ விழா.. தயாராகும் தமிழ் திரையுலகம்.. என்னென்ன திட்டங்கள்? : ஆர்.கே.செல்வமணி பேட்டி !