Tamilnadu

”அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : சட்டப்பேரவையில் வெகுண்டெழுந்த MLAக்கள்!

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் தொடங்கிய உடன் மறைந்த தகைசால் தமிழர் சங்கரய்யா மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்குச் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பப்பெற்ற மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் மறு ஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். இதையடுத்து அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

ஜவாஹிருல்லா: ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல், சர்வாதிகாரத்தின் உச்சம்.

நாகை மாலி :- ஆர்.என்.ரவியைப் போன்று, மிக மோசமாகச் செயல்படும் ஒரு ஆளுநர் வேறு எந்த மாநிலத்திலும் இருந்தது கிடையாது.

வேல்முருகன்: தமிழ்நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.

தளி ராமச்சந்திரன்: ஆளுநரை தங்கள் கருவியாக வைத்துக்கொண்டு மாநில அரசுகளை முடக்கி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

சிந்தனை செல்வன் : 9 கோடி மக்களின் உரிமைக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களை உச்சரிக்க ஆளுநர் ரவிக்கு மனமில்லை. அரசியல் சாசனத்திற்குநெருக்கடி ஏற்பட்டுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைரியமாக எதிர்கொள்கிறார். தேசம் பெற்ற சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ என அம்பேத்கர் பேசியதை முதலமைச்சரின் பேச்சு நினைவூட்டுகிறது.

செல்வப்பெருந்தகை : மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆளுநர் தற்போது அரசியலமைப்பு சட்டத்தைச் சிதைக்கிறார்.

Also Read: சட்டமுன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல: பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர்!