Tamilnadu
“போறபோக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போல...” - சாலமன் பாப்பையா கண்டனம் !
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பலவற்றையும் தனியாருக்கு என்று தாரைவார்த்து வருகிறது. இதனை எதிர்த்து நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் அதையும் மீறி, பலவற்றை இதே போன்று தனியாருக்கு கொடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த சூழலில் தற்போது இரயில்வேக்கு சொந்தமான மதுரையில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றை தனியாருக்கு கொடுக்கப்போகிறது.
இதனை கண்டித்து மதுரை எம்.பி சு.வேங்கடேசன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதாவது மதுரையில் உள்ள அரசரடியில் இரயில்வேக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இரயில்வே மைதானம் மற்றும் இரயில்வே காலனியில் உள்ள சுமார் 40.26 ஏக்கரில் அமைந்திருக்கும் இங்கு, தினமும் காலை, மாலை என அந்த பகுதி பொதுமக்கள் நடைப்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, உடற் பயிற்சி என மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மாபெரும் கையழுத்து இயக்கத்தை கடந்த வாரம் துவக்கி வைத்தார். இந்த இயக்கத்திற்கு மதுரை மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தில் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா கையழுத்திட்டுள்ளார். மேலும் அந்த மைதானத்தை பற்றிய நினைவுகளையும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா பேசியுள்ளதாவது, “மதுரை இரயில்வே மைதானத்தில் சில நேரங்களில் எங்கள் பிள்ளைகள் சென்று விளையாடுவார்கள். என்னால் அங்கு போக முடியவில்லை என்றாலும், தற்போது முதியவர்கள் பலரும் காலை வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருவதை நான் பார்க்கிறேன். இது மக்களுடைய சொத்தாக இருக்கிறது.
இந்த சொத்தை தனியாருக்கு விற்பது என்பது, போகிற போக்கில் நாட்டையே தனியாருக்கு விற்று விடலாம் என்பாது போல இருக்கிறது. மிகப்பெரிய மாற்று வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது கூடாது. என்றைக்கும் போலவே மக்கள் அங்கு சென்று நடக்கவும், ஓடவும், விளையாடவும் மைதானம் இருக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்” என்றுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?